'மொபைல் போனில் வந்த ஒரு டெக்ஸ்ட் மெசேஜ்...' 'உள்ள இருந்த கண்டென்ட் படிச்சதும் வந்த ஆசை...' - எல்லாம் முடிச்சிட்டு செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நன்றாக படித்தவர்களாக இருந்தாலும் பணம் நிறைய வருகிறது என்றால் அதை குறித்து விசாரிக்காமல் இளைஞர்கள் ஏமாறும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
மீண்டும் இதுபோன்ற சம்பவம் தான் கோயம்பேடு பகுதியில் சேர்ந்த இன்ஜினீயர் பெண் ஒருவருக்கு நடந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பாரதி அவென்யூ பகுதியில் வசிப்பவர் 22 வயதான பெண்மணி பூஜா. இவர் தனது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்ஸை நம்பி ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்தி ஏமாந்ததாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
அதில், 'நான் கொஞ்சம் நாள் முன்பு தான் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடிவருகிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய செல்போனிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
அந்த எஸ்.எம்.எஸ்ஸில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் ஒரு மணி நேரத்துக்கு 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கிடைக்கும் என இருந்தது.
அதோடு அதில் ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டு, ப்ரோஸஸ் செய்ய அதை கிளிக் செய்யுமாறு குறிப்பிடப்பட்டது.
நானும் அதன் படி கிளிக் செய்யும் போது செல்போன் செயலி ஒன்று டௌன்லோடு ஆனது. அதில் குறிப்பிட்டிருந்தபடி ஆன்லைன் மூலம் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை அனுப்பினேன்.
ஆனால் அதன்பின் அந்த எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டபடி பணம் எதுவும் வரவில்லை. அந்த அப்பை ஓபன் செய்த போது ஓபன் ஆகவில்லை அதன்பின் அந்த லிங்க்கை ஆய்வு செய்தபோது அது மோசடி எனத் தெரியவந்தது.
தயவு செய்து என்னை நூதன முறையில் ஏமாற்றியவர்களைக் கண்டுபிடித்து பணத்தைத் திரும்ப மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பூஜாவிடம் ஆசையை ஏற்படுத்தி பணத்தை நூதன முறையில் ஏமாற்றிய செல்போன் செயலி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஏமாற்று நிகழ்வில் அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் க்ரைமின் போலீஸாரின் உதவியையும் கோயம்பேடு போலீஸார் கேட்டிருக்கின்றனர்.
இது குறித்து அண்ணாநகர் காவல் சைபர் க்ரைம் போலீஸார், 'இதுபோன்ற கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பணம் தேவைப்படுவோரைக் குறிவைத்து மோசடிக் கும்பல் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றிவருகிறது.
எனவே செல்போன் நம்பருக்கு வரும் எஸ்.எம்.எஸ்., லிங்க்குகளை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன தான் அமெரிக்கால போய் லட்சக்கணக்கா சம்பாதிச்சாலும்...' 'வாழ்க்கையில ஒரு நிறைவு இல்ல...' ஐ.டி இஞ்சினியர் எடுத்த 'அந்த' முடிவு...! - இப்போ ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா...?
- 'நாம ஆர்டர் பண்ண மவுத்வாஷ் தான் இருக்கும்னு நெனச்சு...' 'பார்சல ஓப்பன் பண்ணி பார்த்தா...' உள்ள இருந்த 'பொருள' பார்த்ததும் பயங்கர ஷாக்...! - கடைசியில என்ன பண்ணார் தெரியுமா...?
- VIDEO: ‘உட்றாத ஓடு.., ஓடு’!.. கர்ணன் படத்தில் கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் செல்வதுபோல் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!
- ரொம்ப சிம்பிள்...! 'எடுக்க வேண்டியது ஒரே ஒரு போட்டோ...' உங்களுக்கு 'அது' இருக்கா இல்லையான்னு... 'அடுத்த செகண்டே தெரிஞ்சிடும்...' - எப்படிங்க இது சாத்தியம்...?
- 'மகளிர் தினத்தில்...' 'மொபைல் வாங்கும் பெண்களுக்கு...' - 'வேற லெவல்' ஆஃபர் அளித்துள்ள ஆந்திர அரசு...!
- VIDEO: ‘60 கி.மீ வேகத்தில் பறந்த வேன்’!.. ஆமா டிரைவர் என்ன பண்றாரு..? விரட்டிச் சென்று செல்போனில் வீடியோ எடுத்த நபர்கள்..!
- நண்பா...! நீயாடா இத பண்ண...? 'எந்த பொருளும் டேமேஜ் ஆகல...' 'கெடச்ச ஒரே ஒரு தடயம்...' - வசமா சிக்கிய நண்பன்...!
- ‘அம்மா, அப்பாவை காணோம்’!.. ஒத்தையில நின்னு அழுதுட்டு இருந்த 12 வயது சிறுமி.. ‘யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது’.. அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை..!
- சோபாவுக்கு பின்னாடி கிடைச்ச 50 வருட பழைய ‘லெட்டர்’.. படிச்சு பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி..!
- ‘2 தடவை மாட்டல, அப்போ மறுபடியும் அதே மாதிரி போவோம்’.. சென்டிமென்ட்டால் சிக்கிய நபர்.. சென்னையில் நடந்த ருசிகரம்..!