'கொரோனா கொஞ்சம் ஓரமா போய் விளையாடு'... 'இந்தியாவுக்கே மாஸ் காட்டிய 97 வயது சென்னை தாத்தா'... சிலிர்க்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனாவின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இது சென்னை மக்களுக்கு பெரும் அச்சத்தையும், கவலையையும் அளித்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தச்சூழ்நிலையில் சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது, பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. கிருஷ்ணமூர்த்திக்குக் கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு மூச்சுத்திணறல் இருந்துள்ளது.
ஏற்கனவே அவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பு இருந்ததால் அவருக்கு உடனடியாக, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதன் பயனாக அவருக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு குறைந்து, செயற்கை சுவாசம் நீக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நெகட்டிவ் என வந்ததால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற வயதான நபர் என்றும், அதிலும் இந்தியாவிலேயே கொரோனாவை வென்ற இரண்டாவது வயதான நபர் கிருஷ்ணமூர்த்தி என, மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தனியா அழுதுகொண்டிருந்த இளைஞர்’.. விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்.. சென்னையில் நண்பர்களால் நடந்த கொடுமை..!
- 'அதிபர்' மனைவிக்கு 'கொரோனா!'.. 'நாட்டிலேயே' கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'முதல்' பெண்ணும் 'இவர்தான்'!
- கொரோனாவில் இருந்து 'மீண்டவருக்கு' ஆம்புலன்ஸ் மறுப்பு... 8 மணி நேரம் 'ஆட்டோ' ஓட்டி வீட்டில் சேர்த்த பெண்... நேரில் 'வெகுமதி' வழங்கிய முதல்வர்!
- "ஆத்தி... சைலண்டா எவ்ளோ வேல பாத்திருக்காங்க!".. அதிர்ந்து போன ட்விட்டர்!.. 1 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகள் நீக்கம்!.. என்ன சொல்லப்போகிறது சீனா?
- "சென்னை தொடர்பான இ-பாஸ் நிறுத்தப்படுகிறதா?".. தமிழக அரசு விளக்கம்! உள்தமிழகத்துக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. திருப்பி அனுப்பும் போலீஸார்!
- "மிருகத்த விட கேவலாக நடத்துறீங்களே!".. கொரோனா நோயாளிகள் நிலை குறித்து... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை... கிழித்து எடுத்த உச்ச நீதிமன்றம்!
- மதுரையில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. நெல்லை, தூத்துக்குடியிலும் தலைதூக்குகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,342 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. முழு விவரம் உள்ளே
- 'அமெரிக்காவில் கலக்கிய இந்திய டாக்டர்...' 'கொரோனா வந்து 2 நுரையீரல்களும் அஃபெக்ட் ஆயிருக்கு...' வெற்றிகரமாக இந்த ட்ரீட்மென்ட் மூலமா தான் காப்பாத்திருக்கார்...!
- 'உலகம்' முழுவதும் 'ஆண்கள்' தான் 'அதிகம்...' 'இந்தியாவில்' மட்டும் 'பெண்கள்தான்' அதிகமாம்... 'ஏன் அப்படி?...'