'லண்டனுக்கு வர்ல.. பொறந்த ஊருக்கு எதாவது செய்யணும்!'.. மக்கள் மனம் வென்ற 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன்! முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன்.

பச்சையப்பன் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளியில் படித்து, கல்லூரி நண்பர் கனகவேலின் உதவியுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பினை பயின்றார். 

லண்டனுக்கு சென்று மருத்துவம் செய்து சம்பாதிக்கலாம் என்று கனகவேல் சொன்ன போது, இல்லை கனகவேல், நான் பிறந்த ஊருக்கு எதாவது செய்யணும்னு நினைக்கிறேன் என்று சொல்லி, சென்னையிலேயே ஏழை எளிய மக்களுக்காக 2 ரூபாய் கிளினிக் ஒன்றை தொடங்கினார். பின்னர் 5 ரூபாய் டாக்டர் என்றும் மக்கள் மருத்துவர் என்றும் கொண்டாடப்பட்டார். மெர்சல் திரைப்படத்தில் அட்லி உருவாக்கிய விஜய்யின் கதாபாத்திரமே டாக்டர் ஜெயச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கில் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் வடசென்னையில் வாழ்ந்து மக்களுக்காக தன் மருத்துவத்தை அர்ப்பணித்தார். 45 ஆண்டுகள் 5 ரூபாய்க்கு மகத்தான மருத்துவ சேவையைச் செய்த டாக்டர் ஜெயச்சந்திரன் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி மறைந்தார்.

அடித்தட்டு மக்களும் பாமர மக்களும் ஆயிரக்கணக்கில் கூடி, அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு கண்ணீர் வடித்தனர். மனிதமும் அன்பும்தான் வாழ்க்கையின் பிரதானம் என்று வாழ்ந்த டாக்டர் ஜெயச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அவரால் பயனடைந்த அனைவரும் இன்று அனுசரித்தனர்.

JAYACHANDRAN, DOCTOR, HUMANITY, ANNIVERSARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்