‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் திருமணம் முடிந்த 3வது நாளில் புதுமாப்பிள்ளை சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் பெண் வீட்டாரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஐசக் என்பவருடைய வீட்டில் 2 மாதங்களுக்கு முன் 50 சவரன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போயுள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஏற்கெனவே பல வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர்தான் இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஆரோக்ய ஜான்போஸ்கோ என்ற அந்த நபர்மீது திருச்சி, பல்லடம், இளையாங்குடி, புதுக்கோட்டை, திருமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது ஆரோக்ய ஜான்போஸ்கோ சென்னையில் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தபோது, அவருக்கு சமீபத்தில் திருமணமானது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாமியார் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை ஆரோக்ய ஜான்போஸ்கோவை பிடித்து போலீஸார் விசாரித்தபோது முதலில் கொள்ளை அடித்ததை மறுத்தவர் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணை காதலித்த ஆரோக்ய ஜான்போஸ்கோ திருடிய பணம், நகைகளைக் கொண்டு திருமணம் செய்துள்ளார். காதல் மனைவிக்கும், அவருடைய வீட்டாருக்கும் விதவிதமாக நகை, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அள்ளிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த 3வது நாளில் கணவர் திருடன் எனத் தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துபோன புதுப்பெண் கண்ணீருடன் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு’!.. அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்..!
- ‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘எலக்ட்ரிக் ஸ்டவ்வில் போதை ஜெல்’.. ‘பற்றி எரிந்த அறை’.. சென்னை விடுதியில் நடந்த பயங்கரம்..!
- ‘லட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு’.. ‘சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து’.. ‘கொள்ளையர்கள் செய்த காமெடி’..
- ‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'!
- ‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’!
- 'கடல் கடந்து வந்த காதலி'...'கந்தசாமிக்காக அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்'... சுவாரசிய காதல்!
- 'உன்னோட மனுஷன் வாழ்வானா'?...'தாலி கட்டிய மறுகணமே விவாகரத்து'...ரணகளமான கல்யாண வீடு!