‘முன்விரோதம்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்.. மர்மகும்பலால் ‘சென்னை’ இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கு அருகே உள்ள கொட்டகையில் நேற்றிரவு கிரி (24) என்ற இளைஞரை மர்மகும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. அப்போது கிரியுடன் இருந்த ஆனந்தன் என்பவருக்கு காலில் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கிரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அரிவாள் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கிரியின் தம்பிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் தம்பிக்கும் சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனிப்படை அமைத்து தப்பியோடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அன்பா’ பழகுவேன், அப்புறம் ‘செல்போன்’ நம்பரை வாங்குவேன்.. போனில் பல ‘பெண்களின்’ வீடியோ.. அதிரவைத்த இளைஞர்..!
- 'உயிரிழந்த' மருத்துவரை 'அடக்கம்' செய்த நண்பர்... "டாக்டரை ஹீரோவா பாக்க வேணாம்"... "மொதல்ல சக மனுஷனா பாருங்க"... கண்ணீர் மல்க வேண்டும் சைமனின் நண்பர்!
- ‘கர்ப்பிணி தங்கைக்காக’... ‘தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம்’... ‘அண்ணனுக்கும், கணவருக்கும் நடந்த சோகம்’!
- "மொத பொண்டாட்டி குடும்பத்துக்கே எல்லாம் பண்றாரு"... கடுப்பான 'மருமகன்'... இறுதியில் 'மாமனாருக்கு' நேர்ந்த 'கொடூரம்'!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- சென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'
- 'வீட்டை விட்டு' வெளியே வந்தா 'காய்ச்சல் வந்துரும்...' 'வீட்டிற்குள்ளேயே' இருந்தா 'காய்ச்சுற எண்ணம் வருமா?...' 'ஐ.டி. ஊழியர்களை' அலேக்காக தூக்கிய 'போலீஸ்...'
- சார் என் பொண்டாட்டிக்கு ‘பிரசவம்’.. ‘ரொம்ப சீரியஸ்’.. போனில் கேட்ட ‘அழுகுரல்’.. சட்டென களத்தில் இறங்கிய போலீசார்..!
- கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!
- 'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்