7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி!’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பெண் ஒருவருடைய வயிற்றிலிருந்து 20 கிலோ எடையுள்ள கட்டியை நீக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த ரதி (51) என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கு அவர் சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்துவந்த நிலையில், அவருக்கு நவம்பர் மாதம் வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு சினைப்பையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் செய்யப்பட்ட சிறப்பு பரிசோதனைகளில் அவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி 2 மணி நேர அறுவை சிகிச்சை மூலமாக அந்த 20 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த மருத்துவமனையின் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு எடையுள்ள கட்டியை அகற்றியது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHENNAI, WOMAN, TUMOUR, GOVERNMENT, DOCTORS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்