'சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கொரோனாவா???'... 'எதிர்ப்புசக்தி அதிகரிச்சிருக்கு, ஆனா'... 'அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா பாதிப்பு நிலை குறித்து நடத்தப்பட்ட 2வது கட்ட செரோ ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதை கண்டறியவும், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு உள்ளது என்பதை கண்டறியவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செரோ ஸ்டடி எனும் ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களில் சிலருடைய ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்டறியும் முறையே இந்த `செரோ பிரிவேலென்ஸ் ஸ்டடி' (Seroprevalence Study) ஆகும்.

அந்தவகையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 12,405 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், 2,673 பேர் அதாவது 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் 2வது கட்ட ஆய்வு நடத்தப்பட்டதில் 6,389 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 2,062 பேர் அதாவது 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் மீதமுள்ள கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்