உஷாரான அன்னபூரணி.. களமிறங்கிய போலீஸ்.. எல்லா நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்.. ட்விஸ்ட் அடிக்கும் விவகாரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'அன்னபூரணி அரசு அம்மா' என்ற வார்த்தை தான், கடந்த இரண்டு தினங்களாக, சமூக வலைத்தளங்களில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அதிகம் வைரலாகி வருகிறது.

உஷாரான அன்னபூரணி.. களமிறங்கிய போலீஸ்.. எல்லா நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்.. ட்விஸ்ட் அடிக்கும் விவகாரம்
Advertising
>
Advertising

அதே போல, ஆதிபராசக்தி தெய்வமாக பாவிக்கும் ஒரு பெண்ணிற்கு, போஸ்டர்களையும் ஒட்டி, 'ஆதிபராசக்தி அவதரித்து விட்டார், பக்த கோடிகளே வாருங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

chengalpattu police denied permission for annapoorani event

கழுத்தில் பூ மாலைகளுடன், அந்த பெண்மணி இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, பக்தர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்கின்றனர். தன்னை தெய்வமாய் வணங்கும் பக்தர்களுக்கு, கை நீட்டி ஆசீர்வாதமும் வழங்குகிறார்.

அன்னபூரணி அம்மா

இவை அனைத்துக்கும் மேலாக, அங்கிருந்த பக்த பெருமக்களில் சில பெண்கள், பெண்மணியின் காலைப் பிடித்துக் கொண்டும், அதனை தலை மீது வைத்துக் கொண்டும், 'அம்மா, அம்மா' என கண்ணீர் விட்டு வழிபாடு வேற செய்கிறார்கள். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு, பல விதமான கருத்துக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை

எந்த அளவுக்கு அன்னபூரணியின் வீடியோக்கள், அதிகம் வைரல் ஆனதோ, அந்த அளவுக்கு எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் இந்த அன்னபூரணி. சாதாரணமான பெண்ணை போல இருந்து கொண்டு, தன்னை தெய்வமாக பாவித்துக் கொள்வது தவறு என்றும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

தேடும் போலீஸ்

இதனிடையே, போலீசாரும் அன்னபூரணியை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியன்று, அன்னபூரணி அம்மா சார்பில் அருள்வாக்கு அளிக்கும் நிகழ்ச்சி, செங்கல்பட்டு பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

நிகழ்ச்சிக்கு தடை

இதற்கு முன்னதாகவும், கடந்த 19 ஆம் தேதியில் அன்னபூரணியின் திவ்ய தரிசனம் என்னும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதற்கு அனுமதி வாங்காமல், நிகழ்ச்சியை நடத்தியதாக அன்னபூரணி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரோஹித் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், 'அனுமதி பெறாமல் புத்தாண்டு அன்று நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நபரின் தொலைபேசி எண் மூலம், ஜனவரி 1 ஆம் தேதி மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆனால், அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னபூரணியின் நிர்வாகிகள் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தலைமறைவு?

இதன் காரணமாக, அன்னபூரணி தலைமறைவாக உள்ளார் என்றும் தெரிகிறது. அனுமதி இன்றி, ஒருமுறை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, பின் அதே முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அன்னபூரணி. இதனால், நிச்சயம் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது.

CHENGALPATTU, ANNAPOORANI, அன்னபூரணி, போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்