ரயில்வே கிராஸிங்கில் மரணம்.! இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உடல்.. "திடீர்ன்னு உயிரோட வந்துட்டாங்க".. அதிர்ந்த ஊர்மக்கள் .!! பரபரப்பு பின்னணி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் பகுதியை அடுத்த பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவருக்கு தற்போது 72 வயதாகிறது.

Advertising
>
Advertising

Also Read | வீட்டுல இருந்து திடீர்ன்னு காணாம போன நாற்காலி.. "எங்கடா போச்சு'ன்னு தேடுனப்போ".. இளம்பெண்ணுக்கு தலையே சுத்த வெச்ச உண்மை!!

இவருடைய கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், தனது மகன் வடிவேல் பராமரிப்பில் சந்திரா வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார் சந்திரா. வழக்கமாக வீடு திரும்பும் நேரத்தை விட நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், சந்திரா காணாமல் போனது தொடர்பாக உறவினர்களிடமும் தெரிவித்துள்ளனர்.

அந்த வேளையில், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திற்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வடிவேல் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், மருத்துவமனையில் மூதாட்டியின் உடல் வைக்கப்பட்டதையடுத்து, ரெயில்வே போலீசாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, வடிவேலும் தனது தாயாரான சந்திரா தான் என்பதை உறுதி செய்ததையடுத்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, உறவினர்கள் அனைவருக்கும் சந்திராவின் மரணம் தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர். ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, இறுதி மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், சந்திராவிற்கு படையல் போட்ட சமயத்தில், உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வருவதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும், அதே வேளையில் மகிழ்ச்சியிலும் உறைந்து போயினர். இது பற்றி உடனடியாக காவல் துறையினருக்கும் சந்திராவின் குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.

உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி சந்திரா திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்ட அதே வேளையில், அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்தும் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Also Read | 52 வருசத்துல.. லாட்டரிக்கு செலவு செஞ்சது மட்டும் 3.5 கோடி ரூபா.. "ஆனா கெடச்ச பரிசு எவ்ளோ தெரியுமா?"

CHENGALPATTU, OLD LADY, PASSED AWAY, CAME BACK ALIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்