‘விடாமல் வெளுக்கும் கனமழை’.. வெள்ளக்காடான செங்கல்பட்டு நகரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கனமழை காரணமாக செங்கல்பட்டு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

தென்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் குற்றாலம், அகஸ்தியர் அருவிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பியுள்ளது. அதனால் அங்கிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக அதை சுற்றியுள்ள மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் படகுகள் மூலம் அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

RAIN, HEAVYRAIN, TNFLOOD, CHENGALPATTU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்