திருமண நாளில் கூடி இருந்த உறவினர்கள்.. மாப்பிள்ளை'ய கூப்பிட போனப்ப தான் உண்மை தெரிஞ்சுருக்கு". கண்ணீர் விட்ட மணப்பெண்.. பரபரப்பு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமண நாளின் போது மண்டபத்தில் வைத்து நடந்த சம்பவம் தொடர்பான விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அட, இது எப்படி இங்க??".. வெளிவந்த 5 லட்சம் ஆண்டு பின்னணி.. ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கண்டெடுத்த அற்புதம்!!

செங்கல்பட்டு மாவட்டம், குமிழி கிராமம் பகுதியை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் இடத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவருக்கும், மெய்யூர் என்னும் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் பெரியோர்களும் பேசி நிச்சயம் செய்திருந்தனர்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே, சதீஷ் குமார் மற்றும் திவ்யா ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, திருமண நிச்சயம் ஆன நாள் முதல், வருங்கால மனைவியாக போகும் திவ்யாவிடம் சதீஷ் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. திவ்யா போன் செய்தாலும் பதிலளிக்காமல் சதீஷ் தவிர்த்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சமீபத்தில் திருமண தினமும் நெருங்கி உள்ளது.

திருப்போரூர் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளும் படு தீவிரமாக நடந்து வந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு நடைபெற்ற பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளை சதீஷ் மற்றும் மணப்பெண் திவ்யா ஆகியோரும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், திருமண நாளன்று காலையில், கடும் அதிர்ச்சி மணமக்கள் வீட்டாருக்கு காத்திருந்துள்ளது. இதற்கு காரணம், திருமண நாளில் மாப்பிள்ளை காணாமல் போனது தான். இதன் பின்னர், அங்குள்ள இடங்களில் மாப்பிள்ளையை தேடும் பணியிலும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மாப்பிள்ளை காணாமல் போனதால், மணப்பெண் திவ்யா கண்ணீர் மேடையிலேயே கண்ணீர் விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கனவே ஒரு பெண்ணை சதீஷ் காதலித்து வந்ததாகவும், வீட்டில் சம்மதம் சொல்லாததால் வேறு வழியின்றி இந்த கல்யாணத்துக்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், திருமணத்திற்காக பெண் வீட்டில் இருந்து நகை, பணம் உட்பட ஏராளமான பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி, காவல் நிலையத்திலும் பெண் வீட்டார் புகாரளித்த நிலையில், மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், மாப்பிள்ளை சதீஷின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நாளில் மாப்பிள்ளை காணாமல் போன விஷயம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "எல்லாருக்கும் ரொம்ப நன்றி".. சுரேஷ் ரெய்னா பகிர்ந்த லேட்டஸ்ட் ட்வீட்.. நொறுங்கி போன ரசிகர்கள்!!

CHENGALPATTU, GROOM, ESCAPE, WEDDING DAY, BRIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்