“போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்கணும்னு சொல்லிட்டே இருப்பான்!”.. “பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கஞ்சா பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்க போராடிய பள்ளி மாணவர் கழுத்து நெரிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தை பதற வைத்துள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்த முருகன் - உஷா என்கிற தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், உஷா தன் கணவரை பிரிந்து செங்கல்பட்டு வேண்பாக்கம் பகுதியில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் உஷாவின் மூத்த மகன் புருஷோத்தமன், ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பை காண்பதற்காக அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு கொளம்பியுள்ளார்.

ஆனால் போனவர் திரும்பாததால், உஷா போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில், நேற்று வெண்பாக்கத்தில் உள்ள பாழுங் கிணற்றில் புருஷோத்தமனின் உடலை காவல் துறையினர் மீட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகே எதையும் கூறமுடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புருஷோத்தமன் பற்றி கூறிய ஊர்மக்கள், ‘புருஷோத்தமன் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க முனைவான், யார் தப்பு செய்தாலும் கேட்பான், ஆன்மீகத்தில் நாட்டம் உடையவன், இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தவன்’ என்றும் அவர் இறந்து கிடந்த இடத்தில்தான் பலர் கஞ்சா புகைப்பார்கள் என்றும் அவர்களால் புருஷோத்தமன் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

CHENNAI, CHENGALPAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்