Queen Elizabeth: "ராணி எலிசபெத் சென்னை வந்துட்டாங்க.. விருந்து ரெடி.. திடீர்னு போனில் வந்த உலுக்கும் செய்தி.. அப்பவும் செஃப் செய்த நெகிழ்ச்சி காரியம்.. CWC வெங்கடேஷ் பட் ஷேரிங்ஸ்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு உடல்நல குறைவால் காலமானார்.

Advertising
>
Advertising

Also Read | ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??

தன்னுடைய 96 வயதில் ராணி எலிசபெத் மறைந்த நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செப்டம்பர் 19 ஆம் தேதி ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், ராணி எலிசபெத் சென்னை வந்திருந்த போது நடந்த சம்பவம் தொடர்பாக பிரபல செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்திருந்த விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் Behindwoods சேனலுக்காக நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் முன்பு கலந்து கொண்டிருந்தார்.

அப்போது, ராணி எலிசபெத் சென்னை வந்திருந்த போது நடந்தது பற்றி பேசி இருந்த வெங்கடேஷ் பட், "ராணி எலிசபெத் இந்தியா வந்திருந்த சமயத்தில், தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். மருதநாயகம் படம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக அவரது வருகை இருந்தது. தாஜ் ஹோட்டலில் ராணி எலிசபெத் தங்கி இருந்ததால், இரண்டு Floor முழுவதும் பிளாக் செய்திருந்தார்கள்.

மேலும், அவர்களுக்காக கலைஞர் கருணாநிதி ஒரு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு நான், என்னுடைய ஜூரி செஃப் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் ஜூரி செஃப் ஆகியோர் தான் ராணியின் உணவுக்கு பொறுப்பு. அந்த சமயத்தில், எனது எக்ஸிக்யூட்டிவ் செஃப்பின் தாயார் மறைந்ததாக 6 மணிக்கு அழைப்பு வருகிறது. 7:30 மணிக்கு ராணி எலிசபெத்திற்கு டின்னர். இது முடிய இரவு 10:30 மணி வரை ஆகும். அம்மா இறந்ததாக வந்த அழைப்பிற்கு பதிலளித்த எக்ஸிக்யூட்டிவ் செஃப், 'என் அம்மாவுக்கான காரியத்தை எனது தம்பிகளை வைத்து செய்யுங்கள். என்னால் வர முடியாது' என கூறி விட்டார். ராணி எலிசபெத் செக் அவுட்டாகி மூன்று நாட்கள் கழித்து தான் அவர் அம்மாவின் இறப்புக்கே அவர் சென்றார்" என கூறினார்.

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | ராணி எலிசபெத் மறைவு பத்தி.. பல மாதங்கள் முன்பே கணிப்பு.. உலகமே தேடும் இளம் பெண்.. "யாரு தாயி நீ??"

CHEF VENKATESH BHAT, QUEEN ELIZABETH, CHEF VENKATESH BHAT THROWBACK VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்