சிவப்பு பாதரசம் சார்... 3 கோடி ரூபாய் சார்... ஒரே ரேட்... ஓஹோன்னு வாழ்க்கை... ஸ்கெட்ச் போட்டு அலேக்காக தூக்கிய போலீஸ்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர்  ஸ்கேட்ச் போட்டு சுற்றிவளைத்து பிடித்தனர்.

மண்ணுளி பாம்பு, லில்லிபுட், இரிடியம், ஈமு கோழி விரிசையில மீண்டும் ஒரு மோசடி பொருளாக சந்தைக்கு வந்துள்ள சிவப்பு பாதரம். அப்படி ஒரு உலோகம் இல்லாத நிலையில், இதன் மதிப்பு 3 கோடி ரூபாய் என்றும், இது தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் வல்லமை கொண்டது என்றும் கூறி ஆசை காட்டி ஒரு மோசடி கும்பல் வலம் வந்துள்ளது.

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடியில் ஈடுபட முயன்ற இந்த கும்பல் குறித்து ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள ஒரு பிரபல ரெஸ்டாரண்டில் இந்த கும்பல் சிவப்பு பாதரசம் விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து முன்கூட்டியே மாறுவேடத்தில் அங்கு காவல்துறையினர் முகாமிட்டனர்.

சிறிது  நேரத்தில் அங்கு கூடிய அந்தக் கும்பலை காத்திருந்த போலீசார் சுற்றி வளைத்தனர். இவர்களது செல்போன்களை சோதனை செய்ததில் வீடியோக்கள் சில கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அரிய வகை நோய்களை தீர்க்கும் சிவப்பு பாதரசம் டெமோ காட்சிகள் ஒரு வீடியோவாகவும், அதை வாங்க கூடிய நபர் தன்வசம் வைத்திருக்கும் கத்தை கத்தையான நோட்டுக்கள் மற்றொரு வீடியோவாகவும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

CHEATING, SATHURANGA VETTTAI, POLICE ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்