'பத்திரமா இருங்க மக்களே'.. 14 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழை பொழிவதற்கான பலமான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைப் படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தற்போது சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சில இடங்களிலும் தொடர்ச்சியாகவும், சில இடங்களில் இடைவெளி விட்ட படியும் மழை பொழிந்து வரும் நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை பொழியவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம், வேளாங்கண்ணி, பூவைத் தேடி வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி காமேஸ்வரம், விழுந்தமாவடி புதுப்பள்ளி, கிராமத்துமேடு உள்ளிட்ட நாகை மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி பணியில் இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை எதிரொலி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை லேசான மழை பொழியலாம் எனவும், சில இடங்களில் மேகமூட்டமாக வானம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'திருமணம் ஆகி 2 மாசம்'.. 'கொட்டோ கொட்டுனு’.. மழை பெய்ததால்.. நடந்த 'விவாகரத்து' சம்பவம்!
- ‘கடலோர மாவட்டங்களில் எப்போது கனமழை..?’ ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..’ ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'செம ஃபார்முக்கு வந்த 'கிளைமேட்'... 'சென்னை மக்கள் செம ஹேப்பி'...கனமழைக்கு வாய்ப்பு?
- ‘நமக்கு ஒண்ணுனா உயிரயே கொடுக்குறவங்க..’.. ‘இவங்களுக்கா இப்படி நடக்கணும்’.. பதற வைத்த வீடியோ!
- 'இதையா கேட்டோம்?'.. 'கனமழையால் கட்டிடத்துக்கு நேர்ந்த கதி' ..'உலுக்கிய காட்சி'.. பரவும் வீடியோ!
- 'செத்தாலும் சேர்ந்தே சாவோம்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு'... 'தம்பதியின் உருக்கமான சம்பவம்'!