அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ‘குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (30.11.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (01.12.2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இது அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதனால் அந்தமான் கடல் பகுதியில் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதன்காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்