'சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு'... 'அதிர்ச்சியூட்டிய சிசிடிவி காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 இடங்களில் செயின் பறிப்பு  நடைபெற்றுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க, மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் மட்டும் 9 இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் 29 சவரன் நகைகள் கொள்ளை போயின.

இதில் தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் செயினை அந்தப் பெண் இறுக்கமாக பிடித்துக்கொண்டு சத்தமிட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் அவரது தங்க செயின் தப்பித்தது. அதேநேரம் அவர் கீழே தடுமாறி விழுந்ததில் காயமடைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதேபோல், ஐஸ்ஹவுஸ்,  கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்த சென்ற பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த செயின் பறிப்பு சம்பவங்களால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

CHAIN, SNACHING, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்