'கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம்'... 'அத இழந்துராதீங்க'... எச்சரித்துள்ள மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பல மாதங்களுக்குப் பிறகு கண்ட பலனை இழக்காமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் கொவிட் மேலாண்மைக்கு உதவவும், தொற்றைத் திறம்படச் சமாளிக்கவும் உயர்நிலை ஒழுங்கு குழுவை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
3 உறுப்பினர்கள் அடங்கிய உயர்நிலை ஒழுங்கு குழுவுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின், இணைச் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் தலைமை வகிப்பர். இந்த குழுக்கள், கோவிட் தொற்று அதிகரித்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட்டு, தொற்று அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறியும்.
மேலும் இந்தக் குழுவினர் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் அதிகாரிகளிடம் பேசி, அங்குள்ள நிலவரத்தையும், சவால்களையும் தெரிந்து கொள்வார்கள் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தும்படியும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் படியும், தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வைரசிற்கும்...' 'நியாண்டர்தல்களுக்கு இடையே உள்ள தொடர்பு...' - ஆய்வில் வெளிவந்துள்ள ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!
- 'தமிழகத்தின்' இன்றைய (23-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'அவங்களும் மனுசங்க தான்'... 'கொரோனா தடுப்பூசியில் பணக்கார நாடுகள் செய்யும் வேலை'... கடுமையாக எச்சரித்த ஐ.நா!
- 'எல்லாம் நல்லா போகுதுன்னு நெனச்சா'... 'திடீரென அதிகரிக்கும் கொரோனா'... கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் மாநிலம்!
- 'கொரோனா குறைஞ்சு போச்சுன்னு அசால்ட்டா இருக்காதீங்க'... 'தமிழகம் என்ன நிலையில் இருக்கு'?... சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!
- 'தமிழகத்தின்' இன்றைய (22-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- VIDEO: ‘மேடம் கொஞ்சம் நில்லுங்க’!.. ‘ரெண்டு பேரும் உங்க ஐடி கார்டை காட்டுங்க’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த 2 பெண்கள்..!
- 'தமிழகத்தின்' இன்றைய (21-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'கொரோனா தடுப்பூசி போட வாங்க...' 'உங்களுக்கு செம ஆஃபர் வச்சுருக்கோம்...' - இஸ்ரேல் பாரின் வியக்க வைக்கும் செயல்...!
- 'தமிழகத்தின்' இன்றைய (19-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!