நாடு முழுவதும் 'பச்சை' மண்டல பட்டியலை 'வெளியிட்ட' மத்திய அரசு... 'தமிழகத்தின்' நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மொத்தமாக இந்தியளவில் 319 பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளன. 284 ஆரஞ்சு மண்டல பகுதிகளில் தமிழகத்தில் இருந்து 24 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
அதே போல கொரோனா வைரஸ் மூலம் அதிகம் பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில் உள்ள மாவட்டங்கள் மொத்தம் 130 ஆகும். தமிழகத்தில் இருந்து சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சீபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள மாவட்டமான மத்தியப்பிரதேசத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குழந்தைக்கு பால் வாங்க கூட வழியில்லை’.. ‘நெறைய கஷ்டத்தை பாத்திருக்கோம், ஆனா இது..!’.. செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேதனை..!
- 'உடலை பாக்க முடியாதோன்னு நினைச்சோம்'...'சிங்கப்பூரில் இருந்து வந்த என்ஜினியர் உடல்'... கதறி துடித்த சொந்தங்கள்!
- 'லாக்டவுனுக்கு' முன்பே கிளம்பிய 'அறைத்தோழிகள்!'.. அபார்ட்மெண்ட்டில் 'அழுகிய' நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'இளம்' விமான பணிப்பெண்ணின் 'சடலம்!'
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- உணவு பொருட்கள்... கச்சா எண்ணெய்... அவசரம் அவசரமாக சேமித்து வைக்கும் சீனா!.. பதற்றத்தில் உலக நாடுகள்!.. என்ன நடக்கிறது?
- '160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்'... 'உலக தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை'!
- “புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்து ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்!” - நிபந்தனைகளுடன் மத்திய அரசு உத்தரவு!
- 'ஊரடங்கால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்'... 'பெண்களுக்கு வரபோகும் ஆபத்து' ... ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- கல்லூரி semester எக்ஸாம் எப்போ ஆரம்பம்?.. யூஜிசி வெளியிட்ட அதிரடி தகவல்..!
- ‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்!’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு!’ .. வீடியோ!