மழைக்காக கடைக்குமுன் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கொடுமை..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணார்ப்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மழைக்காக ஒரு கடைக்குமுன் ஒதுங்கியுள்ளார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் இருவர் சுவிக்கி ஊழியை கத்தியால் தாக்கி அவரின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து அந்த நபர்கள் காசிமேடு துறைமுகம் அருகே ஒரு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது நேற்று திருடுபோன இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் செல்வதை பார்த்து அவர்களை பிடிக்க போலிஸார் முயற்சி செய்துள்ளனர். அதில் ஒருவர் தப்பிச்சென்றுவிட மற்றொரு நபரை போலிஸார் பிடித்துள்ளனர். இதனை அடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரிவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தாறுமாறாக வந்த கார்’.. நொடிப்பொழுதில் நடந்த கோரவிபத்து..! நெஞ்சை பதைக்கும் வீடியோ..!
- 'ஜவுளிக்கடைக்குள் நடந்த'...' பதைபதைக்க வைக்கும் சம்பவம்'...நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
- கஞ்சா புகைத்ததை போலிஸாரிடம் கூறிய நபரை கொடூரமாக தாக்கிய இருவர்..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
- 'பெங்களூருக்கு போறேன்னு சொன்னாரு'... சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்!
- 'திடீரென 'மின்சார ரயிலின்' முன்பு குதித்த இளைஞன்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்'!
- 'இன்ஸ்டாகிராம்' பாதுகாப்பில் விழுந்த ஓட்டை'...கண்டுபிடித்த 'சென்னை' பையனுக்கு அடித்தது 'ஜாக்பாட்'!
- கிணற்றுக்குள் மிதந்த.. ‘சாக்குப்பையில் இருந்த பெண் சடலம்..’ அதிர வைக்கும் காரணம்..
- ‘ஒருநாள் கூட...’.. சரவணபவன் அதிபர் மறைவு குறித்து ஜீவஜோதி பேசியது என்ன..?
- ‘சாலையைக் கடக்கும்போது கார் மோதி தூக்கிவீசப்பட்ட நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
- ‘ஃபேஸ்புக் மூலம் பழகி, ஏமாற்றிய இளைஞர்’... ‘காதலியின் தந்தை செய்த அதிர்ச்சி காரியம்'!