'வெளிநாடு சென்று வந்த ஊழியர்களை தனிமைப்படுத்தாமல்'... 'அப்படியே அனுமதித்த தனியார் நிறுவனம்’... ‘22 பேருக்கு கொரோனா பரவியதால்’... ‘சீல் வைத்த அதிகாரிகள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய தனியார் நிறுவன ஊழியர்கள் மூலமாக நொய்டாவில் 22 பேருக்கு கொரோனா பரவிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி அருகே நொய்டாவில் Ceasefire என்ற தனியார் நிறுவனம், ஹோட்டல், பெரிய நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு தீயணைப்பு கருவிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், கருவிகளை விற்பனை செய்வதற்கு அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். ஆனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் அலுவலகத்தில் அனுமதித்தால், இவர்கள் மூலம் அந்த நிறுவனத்தில் 11 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இவர்கள் மூலமாக, இவர்களின் குடும்பங்களுக்கும், குழந்தைகள் உள்பட பலருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  அந்தப் பகுதியில் இருந்த கடைக்காரர் உள்பட, சுமார் 22 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர், அந்த தனியார் நிறுவனத்திற்கு பூட்டி சீல் வைத்துள்ளனர்.

,இவர்கள் மூலம் பரவிய 28 பேரில், 6 பேர் கொரோனா வைரஸ் குணமாகி வெளியேறியுள்ளனர். வெளிநாட்டு பயண விபரங்களை உள்ளூர் நிர்வாகத்திடம் மறைத்ததுடன், வைரஸ் பரவுவதற்கு துணை போனதாக கூறி தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவுதம் புத்தா நகரில் மொத்தம் 38 கொரோனா நோயாளிகளில் இன்னும் எவ்வளவுபேர் அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்