குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. விசாரணையில் வெளியான புதிய தகவல்! நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நீலகிரி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வானிலை மையம், மின்சார வாரியம், சுற்றுவட்டார மக்கள் என அனைத்துத் தரப்புகளிலும் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

இந்திய ராணுவத்தின் உச்சபட்ச தலைவரான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா, ராவத்தின் தனி பாதுகாவலர் சாய் தேஜ் ஆகியோர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் விமானப்படை குரூப் கேப்டன் வருண்குமார் மட்டுமே 80% தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விமான விபத்துக்கு பின் விபத்து நிகழ்ந்த குன்னூர் பகுதி முழுவதையும் ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது.

குன்னூர் மலைப்பகுதியில் பயணம் செய்த காரணத்தினால் திடீரென்று மூடுபனி உருவாக வாய்ப்பு அதிகம். பெரும்பான்மையான ஹெலிகாப்டர் விபத்துகள் மலைப்பகுதிகளில் நடப்பது அதனால் தான். மூடுபனி வருகிறபோது, ஹெலிகாப்டர் எப்படி பயணிக்கிறது என்பதை அறிய முடியாமல் வெளியே கருப்பு நிறமாக மாறி எதையும் காண முடியாமல் போகும். அதுமட்டுமல்லாமல் மூடுபனியினால் ஹெலிகாப்டர் எந்த கோணத்தில் பறக்கிறது என்பதனை அறிய முடியாது. விமானம் என்றால் அதனை நேராக நிமிர்த்த முடியும். ஹெலிகாப்டரில் அதை தெரிந்துக்கொள்ள முடியாது.

நீலகிரி மாவட்டம் முப்படைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்து சம்பந்தமாக காவல்துறை விசாரணையில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

1. ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் கைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

2. நீலகிரி மாவட்டம் மின்சாரத் துறைக்கு சம்பவ இடத்தில் High Transmission Lines மற்றும் High Voltage Poles ஆகியவை உள்ளதா அது சேதமடைந்துள்ளதா என காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

3. சம்பவ இடம் அருகில் உள்ள வனப்பகுதிகளில் STF (Special Task Force) தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4. சம்பவ தினத்தன்று சம்பவ இடத்தின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

5. மேலும் பலதரப்பட்ட சாட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BIPIN RAWAT HELICOPTER ACCIDENT, BIPIN RAWAT, CHOPPER CRASH, NILGIRS POLICE, பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்