ஸ்கூல் வேன்களில் சிசிடிவி, சென்சார் கட்டாயம்.. அதிரடி காட்டிய தமிழக அரசு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தங்க செயினை திருடும் எறும்புகள்.. "இவங்க மேல எப்படி கேஸ் போடுறது?".. IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ..!

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஜீன் 13 ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 24 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மாணவர் பாதுகாப்பு

அதன்படி,  அனைத்து பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளி வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. பேருந்து பின்னால் எடுக்கும்போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இந்த கேமரா பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வாகனங்களின் பின்பகுதியில் மாணவர்கள் நின்றால் ஒலி எழுப்பக்கூடிய வகையில் சென்சார்கள் பொருத்தப்படவேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு

தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சில விபத்துகளின் அடிப்படையில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அனைத்து பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக  இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பினை பலரும் வரவேற்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Also Read | முகத்தில் கருப்பு ஸ்டிக்கருடன் விளையாடிய செரீனா வில்லியம்ஸ்.. காரணம் இதுதானா?..!

CCTV, SENSOR MANDATORY, TN GOVERNMENT, SCHOOL VAN, TAMILNADU NEWS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்