'டப்புனு கதவ அடைச்சாங்க!'... 'அங்க இருந்த 10 ஆண்களும்' எங்கள!.. நிதி நிறுவனம் மீது பெண்கள் பரபரப்பு புகார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள கிராமப் பெண்கள் வேளாண் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனைச் செலுத்தாதால், அவர்களை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி கையெழுத்து பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தற்சார்பு வேளாண் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற 16 பேர் கொண்ட மகளிர் குழு, 2017-ஆம் ஆண்டு முழுக் கடனையும் அடைத்தது. இந்த குழு உறுப்பினராக இருக்கும் பெண் ஒருவர் இன்னும் சில மகளிர் குழுக்களை இந்த நிறுவனத்திடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் தன்னையும் அந்த நிறுவனம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நிதி நிறுவனத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு போன் செய்த பெண் அதிகாரி ஒருவர், கடன் பெற்ற இன்னும் 2 பெண்களுடன் முதலில்  நெல்வாய் கூட்ரோட்டில் உள்ள அலுலகத்துக்கு வரச்சொல்லிவிட்டும் பின்னர் பாதியில் அவர்களை மடக்கிய அதிகாரி ஒருவர், ‘உங்களை வெள்ளைபுத்தூரில் உள்ள அலுவலகத்துக்கு வர சொல்லியிருக்காங்க’ என்று கூற இந்த பெண்கள் மறுத்துள்ளனர். ஆனால் அந்த அதிகாரியோ  ‘எங்க மேல நம்பிக்கை இல்லையா? நாங்க உங்கள என்ன பண்ணிட போறோம்?’ என்று கூறியுள்ளார்.

அதை நம்பி அங்கு சென்றபோது, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட ஆண்களும், ஒரு பெண் அதிகாரியும் சேர்ந்து இந்த 3 பெண்களையும் உள்ளே வைத்து கதவைச் சாத்திவிடு, ஆபாசமாக பேசியதாகவும், தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அடித்து மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலெழுப்பிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய மதுராந்தகம் டி.எஸ்.பி மகேந்திரன் உத்தரவிட்டார். வழக்கும் பதியப்பட்டது. இதுபற்றி பேசிய வேளாண் நிதி நிறுவன அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

WOMAN, KANCHIPURAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்