‘அந்த இருமல் சத்தம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது சார்...’ ‘எனக்கு ஒண்ணும் இல்ல, ஆனா அத கேக்குறப்போ...’ காலர் ட்யூனை தடை செய்ய வழக்கு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு மூலம் அனைத்து மொபைல் நெட்ஒர்க்கிலும் ஆங்கிலத்தில் வரும் காலர் ட்யூனை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் மக்கள் அனைவரையும் பீதி அடைய செய்துள்ளது கொரோனா வைரஸ். இன்று வரை இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க படவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நாடுகளும் பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.
இந்தியாவிலும் பல்வேறு முறைகளில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகளையும், தற்காத்துக்கொள்ளும் அறிவுரைகளையும் பரப்பி வருகிறது. மத்திய அரசு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக மொபைல் போனில் ஒருவரை அழைக்கும் போது, இருமலுடன் தொடங்கும் இந்த விழிப்புணர்வு விளம்பரத்திற்கு பெரும்பாலான மக்களளை எரிச்சலடைய செய்துள்ளது. ஒரு சிலர் இந்த விளம்பரத்தை பாராட்டியும் வருகின்றனர்.
மேலும் இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் இருமலுடன் தொடங்கும் இந்த விளம்பரம் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்று நினைக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து வாட்ஸ் அப், குறுஞ்செய்தி, ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் வழியே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் தொடர்ந்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யாரும் சாமி சிலைய தொடாதீங்க....’ ‘கடவுளுக்கு மாஸ்க் அணிவித்த அர்ச்சகர்...’ கோயில் நிர்வாகம் எடுத்த எச்சரிக்கை முடிவு...!
- ‘ஐ.பி.எல் கண்டிப்பா நடக்கும்...’ ஆனால், ‘அதுக்கெல்லாம்’ அங்க பெர்மிஷன் கெடையாது...! ஐ.பி.எல் தொடர்பான வதந்திகள் குறித்து புதிய தகவல்கள்...!
- 'வாவ்... செம ஐடியா...!' 'கொரோனாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகணுமா...?' அப்படின்னா 'இதுதான்' ஒரே வழி... வைரலாகும் அல்டிமேட் வீடியோ...!
- 'டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 2 பேர் உயிரிழப்பு...' '6 தமிழர்கள் உட்பட 138 இந்தியர்கள்...' 624 பயணிகளுக்கு கொரோனா வைரஸ்... !
- பணத்துக்கே ‘திமிரு’ காட்டிய கொரோனா வைரஸ்...! ‘கரன்சியையும் விட்டு வைக்காத கொடூரம்...’அதிக வெப்பத்தில் எரிக்க உத்தரவு...!
- எப்படிடா 'இது' அங்க இருந்து சென்னைக்கு வந்துச்சு...! ‘ப்ளீஸ் எப்படியாச்சும் திருப்பி அனுப்பிடுங்க...’ 'அதுக்கு கொரோனா வைரஸ் இருக்கா..? இல்லையா...?' அதிர்ச்சி சம்பவம்...!
- பசிக்குதா..? 'பதில் சொல்ல இயலாமல் கலங்கும் காதல் மனைவி...' 'ஆசையாக ஊட்டியபின் அகமகிழும் கணவன்...' உள்ளத்தை உருக செய்யும் 'காதல்' காணொளி...!
- 'ரிமோட்' காருக்குள்ள எல்லாம் செட் பண்ணி வச்சாச்சு...! அது எப்படி கடைக்குப் போய் சாமான்களை வாங்கிட்டு வருது தெரியுமா...? 'ட்ரெண்டிங்' ஆகும் வீடியோ...!
- 'அய்யயோ..! எல்லாரும் ஓடுங்க, கொரோனா வைரஸ் வருது...!' ஹாயா ஜம்முன்னு உட்கார்ந்திட்டு இருக்கீங்களா, இப்ப பாருங்க...! பயணிகளை 'தெறிக்க' விட்ட நபருக்கு என்ன தண்டனை தெரியுமா...?
- 'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!