"யூத்..னு நெனச்சேன்" - போலீஸ் அதிகாரியின் வலையில் சிக்கிய மிஸ் தமிழ்நாடு அழகி - ஆப்பு வைத்த ஆதார் கார்டு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இளம்பெண் ஒருவரை ஏமாற்றியதாக ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தன்னை யூத்தாக காட்டிக்கொண்டு இளம்பெண்ணுடன் லிவிங் டு  கெதரில் உல்லாசமாக இருந்திருக்கிறார் ஆண்ட்ரூஸ்.

Advertising
>
Advertising

Job Alert : 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF ல் வேலை - சூப்பர் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?

மிஸ் தமிழ்நாடு

ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சியில் வீடு ஒன்றை வங்கி ஒன்றின் உதவியுடன் வாங்கியுள்ளார் முன்னாள் மிஸ் தமிழ்நாடு அழகி. ஆனால், அந்த வீட்டின்மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நிலுவையில் இருந்ததை  அறியாமல் அழகி ஆபத்தில் சிக்க, அப்போது ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறார் ஆண்ட்ரூஸ். தான் காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

வங்கி மீது வழக்குத் தொடுக்க வழக்கறிஞர் ஒருவரையும் ஆண்ட்ரூஸ் ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட அழகி அந்த பணிகளில் ஈடுபடுகையில் ஆரம்பித்த இருவருக்கு இடையேயான நட்பு அதன்பிறகு வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது.

செல்வ பின்புலம் கொண்ட அழகியின் பெற்றோர்கள் வெளிநாட்டில் வசித்துவந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது அம்மா மரணமடைந்திருக்கிறார். அப்போதுதான் சிறப்பு ஜெபம் என்னும் வலையை வீசியிருக்கிறார் ஆண்ட்ரூஸ்.

சிறப்பு ஜெபம்

தாயை இழந்ததால் விரக்தியுடன் காணப்பட்ட அந்தப் பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான் புகுந்து இருப்பதாகவும் அதனால்தான் இழப்பு ஏற்பட்டதாக கூறிய ஆண்ட்ரூஸ் அதற்கு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என போதகர் ஒருவரையும், தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அங்கு அழைத்து சென்றுள்ளார்.

தொடர்ந்து மிஸ் தமிழ்நாடு அழகியை ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மிகவும் அக்கரை காட்டி, உடன் இருந்து நன்றாக பார்த்துக்கொண்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். சாத்தானை விரட்டுவதற்கு 40 நாட்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி சிறப்பு பிராத்தனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பின்னர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் மிஸ் தமிழ்நாடு அழகியை விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் அவரது வீட்டார்களும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறிள்ளனர்.

இதனிடையே ஆண்ட்ரூஸ்க்கு வயது அதிகமாகத் தெரிகிறது என அந்தப் பெண் சந்தேகித்திருக்கிறார். அதற்கு அவருக்கு 42 வயதுதான் ஆகிறது என்றும், வெயிலில் அதிகநேரம் பணிபுரிந்ததால் அவரது நிறம் மாறிவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.

போலி போலீஸ்

மேலும், அந்தப் பெண்ணிடம் இருந்து நகைகள், பணம் மற்றும் வீட்டினை லாவகமாக ஆண்ட்ரூஸ் வீட்டினர் எடுத்துக்கொண்டதாகவும் பின்னர் அவரை வாடகை வீட்டில் வசிக்க நிர்பந்தித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் ஆண்ட்ரூஸ்சின் ஆதார் கார்டு மிஸ் தமிழ்நாடு அழகியிடம் கிடைத்துள்ளது. அதில் ஆண்ட்ரூஸ் ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும் அவருடைய உண்மையான வயது ஐம்பத்தி ஆறு (56) என்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த அந்தபெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் வசிக்கும் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது அவர் உதவி ஆய்வாளர் இல்லை என்பதும் அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.

தன்னிடம் வயது குறைவு என்று கூறி நம்பவைத்து ஏமாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இருவரிடம் விசாரணையை துவக்கினர். விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளரான ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வயதை குறைத்து அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளிக்கரணையில் மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற பெண்ணிடம் இளைஞராக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மீது கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.வழக்கு பதிவு செய்ததோடு நிறுத்திக்கொண்ட பள்ளிகாரணை போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காவல்துறை உயர்அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கூறப்படுகிறது.

"இவ்ளோ பில்டப் தேவையில்லை.. வேணும்னா வெளில போங்க" - நயினாருக்கு பதில் கொடுத்த சபாநாயகர் அப்பாவு..!

CASE FILLED, POLICE OFFICER, CHEAT, MISS TAMILNADU, போலீஸ் அதிகாரி, மிஸ் தமிழ்நாடு, ஆதார் கார்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்