'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சீனாவிலிருந்து சென்னை திரும்பினார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சுற்றித்திரிந்ததையடுத்து, திருமங்கலம் போலீசார் அவரை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சென்னை திரும்பிய தந்தை மகன் ஆகிய இருவர் கோயம்பேட்டில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றுள்ளனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் மீது கோயம்பேடு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
3 பேர் மீதும் தொற்றுநோய் பரப்பும் வகையில் செயல்படுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை அலட்சியம் செய்தல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களை பரப்பும் செயலில் ஈடுபடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக நேற்றைய தினம் கோடம்பாக்கத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் துபாய் நாட்டில் இருந்து திரும்பி தனிமைப் படுத்திக் கொள்ளாமல் சுற்றித் இருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள்.. தண்ணீரை பீய்ச்சி விரட்டிய அதிகாரிகள்..!
- 'சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்...' 'அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக...' தமிழக அரசு அறிவிப்பு...!
- "இங்கேயே சாப்பிடுங்க.... இங்கேயே தூங்குங்க..." "இனிமே ஹாஸ்பிட்டல் தான் உங்க வீடு..." 'டாக்டர்கள்' வீட்டுக்குச் செல்ல 'தடை...'
- வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வந்து ... தனிமையில் இருக்காமல் சுற்றி திரிந்த நபர் ... நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
- 'பெட் ரூமில் தூங்கி கொண்டிருந்த கணவன்'... 'திடீரென நர்ஸ் செய்த விபரீதம்'... சென்னையில் நடந்த கோரம்!
- 'ஹை பிரசர், சுகர், கிட்னி டிஸ்ஆர்டர், ஹார்ட் பிராப்ளம்...' "மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஜாக்கிரதை..." இவர்களை 'கொரோனா' எளிதில் 'தாக்கும்'... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- எனக்கு இப்போ 'டீ' குடிக்கணும்...! 'டீயை தாமதமாக கொண்டு சென்ற நர்ஸ்...' விரக்தியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் செய்த காரியம்...!
- "அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'
- 'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. "லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை..." 'திணறும்' அதிகாரிகள்...