"முடிஞ்சா நெருங்கிப் பாருங்க".. 9 மாநில போலீசுக்கு சவால் விட்ட திருடன்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை முடிந்தால் பிடித்துப் பார்க்கவும் என 9 மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு சவால்விட்ட பலே கார் திருடனை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

“மூடநம்பிக்கை எல்லாம் இல்ல”.. 7-ம் நம்பரை வச்சதுக்கு காரணம் இதுதான்.. முதல்முறையாக சீக்ரெட்டை உடைத்த ‘தல’ தோனி..!

ராஜஸ்தானைச் சேர்ந்த சத்தியேந்திர சிங் ஷெகாவத் இதுவரையில் குஜராத், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹைதராபாத், தமிழ்நாடு, டாமன், டையூ மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கார்களை திருடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காவல்துறைக்கு வாட்ஸப் மூலமாக சவால் ஒன்றையும் விட்டிருந்தார் ஷெகாவத்.

சவால்

காவல்துறைக்கு ஷெகாவத் அனுப்பிய தகவலில் "முடிந்தால் என்னை கைது செய்யவும்" என குறிப்பிட்டிருக்கிறார். இவர் திருடும் விலையுயர்ந்த கார்களை விற்கும் வேலையை செய்து வந்திருக்கிறார் இவரது மனைவி. நவீன இயந்திரங்களைக் கொண்டு போலி சாவிகளை உருவாக்கி அதன் மூலம் திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார் இவர்.

இதன் இடையே கடந்த 2003 ஆம் ஆண்டு காவல்துறையில் ஷெகாவத் சிக்கினார். அதன் பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு மீண்டும் தன்னுடைய கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளார். கடந்த நான்கு வருடங்களில் பெங்களூரு நகரத்தில் மட்டும் 14 விலை உயர்ந்த சொகுசு கார்களை திருடி உள்ளார்.

வழக்குகள்

எம்பிஏ பட்டதாரியான இவரிடமிருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ்யூவி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 20 கார்கள், பைக்குகள், சாவி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை காவல்துறை இவரிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஷெகாவத்தின் மனைவி சொகுசு கார்களை விற்பனை செய்யும்போது காவல்துறையிடம் சிக்கி உள்ளார். அப்போதுதான் ஷெகாவத் காவல்துறைக்கு சவால் விட்டிருக்கிறார். 2003 ஆம் ஆண்டிலிருந்து கார் திருட்டில் ஈடுபட்டு வந்த ஷெகாவத் மீது டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

9 மாநில காவல்துறைக்கு சவால் விட்ட பலே கார் திருடனை பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

அடேங்கப்பா..! 400 வருசத்துக்கு அப்புறம் லண்டனுக்கு கொண்டுவரப்பட்ட 2 நீர்நாய்கள்.. இதுக்கு பின்னடி இப்படியொரு காரணம் இருக்கா..?

CAR, CAR LIFTER, RAJASTHAN, ARREST, BENGALURU POLICE, THIEF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்