'என்னதான் போதையில் இருந்தாலும்'..'இப்படியா கேக்குறது?'.. தலைகீழாகக் கவிழ்ந்த கார்.. டிரைவரின் விநோத பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை செண்ட்ரல் நிலையம் அருகே உள்ள தென்னக ரயில்வே அலுவலம் இருக்கும் பகுதியில் நேற்று முன்தினம், வெகுவேகமாக வந்த சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் நடைபாதையில் மோதியது.

இதனால் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது டிரைவரின் சீட்டில் இருந்த நபர் மதுபோதையில் உளறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரித்ததில், காரை ஓட்டிவந்த 24 வயது நபரின் பெயர் சாகுல் ஹமீது என்றும், பாண்டி பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் இவர், மதுபோதையில் வந்ததால் கார், தன் கட்டுப்பாட்டையும் மீறி கவிழ்ந்ததாக, அவரே வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

மேலும் சாகுல் ஹமீதின் கார் கவிழ்ந்த இடத்துக்கு அருகில்தான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இருப்பதாகவும், அதனால் கூட்ட நடமாட்டமுள்ள அப்பகுதியில் யார் மீதும் கார் மோதாமல் தப்பித்ததே பெரிய விஷயம் என்றும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சாகுல் ஹமீது,  கார் கவிழ்ந்தபோது, ‘ஏன் கார் நகரமாட்டீங்குது’ என்று குடிபோதையில் உளறியது அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கார் தலைகீழாக கவிழ்ந்தது கூட தெரியாத அளவுக்கு போதையில் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ACCIDENT, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்