‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அண்ணா சாலையில் கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், தனது ஓட்டுநருடன், மகேந்திரா வெரிட்டோ காரில், சொந்த வேலையாக இன்று சென்னைக்கு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும், அண்ணாசாலையில் உள்ள பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே சென்றபோது, திடீரென காரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுநரும், பாலசுப்ரமணியனும், புகையை கட்டுப்படுத்த முயற்சி செய்து பார்த்துள்ளனர். எனினும், கட்டுப்பாட்டில் இல்லாமல், கார் தீப்பிடித்து எரிந்தது.
மளமளவென தீ பரவியதால், கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது. தீ விபத்து காரணமாக அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் உடனடியாக போக்குவரத்தை சீர் செய்தனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம், பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நொடிப்பொழுதில் தடம் புரண்ட பயணிகள் ரயில்’.. ‘கோர விபத்தில் 50 பேர் பலி’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- 'இந்தா விழுந்துருச்சுல்ல.. 'மீண்டும் பேனர் விழுந்து படுகாயம்.. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் டாஸ்மாக் ஊழியர்'!
- 'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'!
- 'சின்ன சண்ட இப்படி போய் முடியும்னு நினைக்கல'...'சென்னை பெண் தொழிலதிபரின் தற்கொலை'...அதிர்ச்சி பின்னணி!
- ‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- 'திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு'.. தனியார் 'கல்லூரி பேருந்தில்' ஏற்பட்ட 'விபத்து'!
- 'எதேச்சையாக குழந்தை செய்த காரியம்'.. பரிதாபமாக பலியான இளம் தாய்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
- டயர் பஞ்சராகி ஓரமாக நின்ற லாரி மீது மோதிய பேருந்து..! 5 பேர் பலியான பரிதாபம்..!
- ‘சொகுசு பேருந்தும் மினி வேனும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘நொடியில் நடந்து முடிந்த பயங்கரம்’..
- ‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா..! சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..!