உல்லாச வாழ்க்கை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டு,ரூபாய் 40 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடந்த 4-ம் தேதி கோவை நீலிக்கோணம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தன்னுடைய தோட்டத்தை விற்று சுமார் 40 லட்ச ரூபாய் பணத்துடன் காரில் வீடு திரும்பியிருக்கிறார்.பணப்பையை எடுத்து வருமாறு டிரைவர் கிஷோரிடம் சொல்லிவிட்டு பழனிச்சாமி வீட்டிற்குள் செல்ல,டிரைவர் கிஷோர் கண் இமைக்கும் நேரத்திற்குள் காருடன் சேர்த்து பணப்பையையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி போலீசில் புகார் அளிக்க,அவர்கள் டிரைவர் கிஷோரைத் தேடி ஒருவழியாக தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.திருடிய உடன் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து பெங்களூர், புதுச்சேரி என பல நகரங்களுக்கும் சென்று பணத்தை ஜாலியாக கிஷோர் செலவு செய்த விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிஷோர் செலவு செய்த தொகை போக மீதமுள்ள 35 லட்ச ரூபாய் பணம்,நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக கிஷோர் இவ்வாறு பணத்தை செலவு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘விடிய விடிய பப்ஜி’... ‘பள்ளிக்கு போவதாகக் கூறிய மாணவர்கள்’... 'பெற்றோருக்கு நேர்ந்த துயரம்’!
- ‘மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய பல் வலி மாத்திரை’.. ‘பிரித்த இளைஞருக்கு காத்திருத்த அதிர்ச்சி’.. கோவையில் பரபரப்பு..!
- 'இம்புட்டு கேக் வெட்டுனத்துக்கு போய் புடிச்சுட்டாங்க.. நான்லாம் ஆளையே'.. தற்பெருமை பேசி சிக்கிய ரவுடி!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘பிரசவத்தில் உயிரிழந்த தாய்’.. ‘குழந்தையை ரூ.7500 -க்கு விற்ற அக்கா கணவர்’.. அதிர வைத்த காரணம்..!
- '1 ரூபாய்க்கு இட்லியா?'.. 'கமலாத்தாள் பாட்டிக்கு உதவிய பிரபல நிறுவனம்'..'பிஹைண்ட்வுட்ஸ் வாசகரின் நெகிழவைத்த கடிதம்!'
- ‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா..! சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..!
- ‘குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று’... ‘அத்துமீறிய போலீசால் நடந்த அதிர்ச்சி சம்பவம்’!
- ‘சுமார் 60 கிமீ வேகத்தில் பறந்த கார்’.. ‘அசந்து தூங்கிய டிரைவர்’.. வைரலாகும் வீடியோ..!
- 'இதுவே டவுன் பேமெண்ட் மாதிரி இருக்கே'.. அபராதம் விதித்த டிராஃபிக் காவலர்கள்.. அதிர்ந்த லாரி உரிமையாளர்!