டயரில் சிக்கிய இளைஞர்.. தரதரவென இழுத்துச்சென்ற கார்.. திண்டுக்கல் அருகே துயரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த புத்தாண்டு தினத்தன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த வடமதுரைக்கு அருகே டயரில் சிக்கிய இளைஞரை வெகுதூரம் கார் ஒன்று இழுத்துச் சென்றிருக்கிறது. இந்நிலையில் அந்த கார் ஓட்டுனரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

வெள்ள பொம்மன்பட்டி பிரிவு அருகேயுள்ள உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கிற்கு சம்பவம் நடந்த அன்று பெட்ரோல் போட வந்த காரின் பின் பக்க டயரில் இளைஞர் ஒருவரது உடல் சிக்கியிருப்பதை அங்கே வேலை பார்த்துவரும் நாடுகண்டானூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவர் பார்த்திருக்கிறார்.

காரில் சிக்கிய சடலம்

கார் பெட்ரோல் பங்கின் நுழைவு வாயிலில் நுழையும்போது சடலம் காரிலிருந்து கீழே விழுந்திருக்கிறது. காரில் வந்தவர்கள் சடலத்தை பார்க்காமல் இருந்த நிலையில் கிருஷ்ணன் இது குறித்து கேட்க முயற்சிக்க, உடனே சுதாரித்த காரில் வந்த குடும்பம் அங்கிருந்து அவசர அவசரமாக அங்கேயிருந்து தப்பித்துச் சென்றிருக்கின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோ பங்க் ஊழியர்கள், உடனடியாக வடமதுரை காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். 
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சடலத்தின் அருகே ஒரு பை இருந்ததைக் கண்டு அதை பரிசோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த ஒரு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது இறந்த நபர் விழுப்புரம் மாவட்டம், பொங்கம்பட்டு தெருவைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பது தெரியவந்தது.

ஓம் பிரகாஷ், பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்புகையில் அதிகமாக மது அருந்தியிருந்ததால் பேருந்து நடத்துனர் அவரை வடமதுரை பெட்ரோல் பங்க் அருகே இறக்கிவிட்டிருக்கிறார்.

விபத்து

அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று மோதி ஓம்பிரகாஷ் இறந்ததும், காரில் சடலம் சிக்கி இருந்ததை அறியாத கார் ஓட்டுநர் காரை நீண்ட தூரம் ஓட்டி வந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அங்கிருந்து நிற்காமல் சென்ற காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்தனர்.

புதுக்கோட்டை நபர் கைது

அதில் ஓம் பிரகாஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டிச் சென்றது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது இதனை அடுத்து ராஜேஷ் மீது  வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, விபத்து, TAMILNADU, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்