200 மீ உயரத்தில் தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த கார்.. அலறி ஓடிய மக்கள்.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் 200 மீட்டர் உயரத்திலிருந்து கார் ஒன்று பறந்து வந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

'பாலை ஊத்துனா பச்சை கலர்ல மாறிடும்.. பவர்ஃபுல் நவபாஷண சிலை'.. புதுசாக உருட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

குன்னூர்

உதகமண்டலத்தில் பொதுவாகவே தேயிலை தோட்டங்கள் அதிகம். இங்கு வசித்துவரும் பெரும்பான்மையான மக்கள் இங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்துவருகிறார்கள். இந்நிலையில், குன்னூர் பகுதியில் உள்ள தூதூர்மட்டம் என்ற இடத்தில் இன்று வழக்கம் போல தேயிலை தோட்ட பணியாளர்கள் தங்களது வேலைகளை செய்து வந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கார் ஒன்று சுமார் 200 மீட்டர் உயரத்தில் இருந்து பாய்ந்து தேயிலை தோட்டத்திற்கு வந்து விழுந்திருக்கிறது. இதனை அடுத்து தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் அச்சத்துடன் அலறி ஓடினர்.

சினிமா படப்பிடிப்பு

இதனை தொடர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் கார் வந்து விழுந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது சினிமா படப்பிடிப்பு என தெரிய வந்திருக்கிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக குன்னூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த காரும் பறந்து இருக்கிறது.

கொரோனா

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் தனது இருப்பை பதிவு செய்துவிட்டது. இதன் காரணமாக பல சிக்கல்களை மனித சமுதாயம் சந்தித்தது. உயிரிழப்புகள், வேலைவாய்ப்பின்மை என பல்வேறு சோதனைகள் எழுந்தன.

இதனிடையே கொரோனா காரணமாக பயண தடைகளும் கடுமையாக விதிக்கப்பட்டன. மேலும், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் வழக்கமாக நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கட்டுள்ளன.

இதனால் ஊட்டி போன்ற இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்கு படமெடுக்க படையெடுத்து வருகிறார்கள் திரைத்துறையினர்.

மீன் பிடிக்க இப்படி ஒரு ஐடியாவா?.. சிறுவனை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரல் வீடியோ..!

COONOOR, CAR, CAR CRASHES, TEA ESTATE, குன்னூர், தேயிலை தோட்டம், கார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்