சாலையில் சென்று கொண்டிருந்த போதே தீ பிடித்த கார்... திருவண்ணாமலையில் திடீர் விபத்து!- சிசிடிவி காட்சிகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலையில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் ஒன்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் விலை உயர்ந்த கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன் பக்கத்தில் தீ தகதகவென பிடித்து எரியத் தொடங்கியது. திடீரென தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் கார் ஓட்டிச் சென்றவர் பயந்து வேகமாக காரை விட்டு இறங்கிவிட்டார்.
காரை ஓட்டிச் சென்ற சையது என்பவர் சென்னையைச் சேர்ந்தவர். சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். தொடர்ந்து 4 மணி நேரம் சென்னை முதல் திருவண்ணாமலைக்கு வண்டியை நிறுத்தாமல் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ பிடித்ததா என்பது குறித்து எந்த உறுதியான தகவல்களும் இல்லை.
தீ பிடித்ததைப் பார்த்ததும் உடனடியாக ஓட்டுநர் காரை விட்டு இறங்கி உள்ளார். வண்டியில் இருந்த தனது உடைமைகளையும் வேகமாக காரில் இருந்து வெளியே எடுத்துவிட்டார். இதனால் காரைத் தவிர வேறு எந்த பொருள் சேதமும் உரிமையாளருக்கு ஏற்படவில்லை. காயமும் இல்லை. திருவண்ணாமலை போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிவேகமாக ஒரே பைக்கில் சென்ற 3 சிறுவர்கள்... மரத்தில் மோதி பலியான துயரம்..!
- ஸ்டாப்பில் இறங்குவதற்குள் கிளம்பிய பேருந்து.. அச்சத்தில் ஓடும் பேருந்திலிருந்து குதித்த மாணவி பரிதாபமாக உயிரிழப்பு..!
- சமைக்க வாங்கிய மிக்ஸ்டு காய்கறிகள் பாக்கெட்: உள்ளிருந்து எட்டிப்பார்த்த அந்த 2 கண்கள்… அதிர்ந்த இளைஞர்
- இப்படியொரு ‘தண்டனை’ கொடுப்பது இதுதான் முதல்முறை.. நாட்டையே உலுக்கிய பேருந்து விபத்து.. நீதிமன்றம் ‘பரபரப்பு’ தீர்ப்பு..!
- சாலையின் குறுக்கே வந்த பன்றி... நிலைதடுமாறிய பைக்..!- பதற வைக்கும் காட்சிகள்!
- மீண்டும் ஒரு கோவை அரசுப்பேருந்து விபத்து... தப்பிய பயணிகள்!- அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்
- நேற்று சல்மான் கான்... இன்று பிரபல பாடகியை முகத்திலேயே கடித்த பாம்பு..!- வைரல் காட்சி
- அதிவேகமாக வந்த சரக்கு லாரி... கவிழ்ந்த கோவை அரசுப்பேருந்து!- பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
- எமனாக வந்த கார்.. கணவர் கண் முன் உயிரை விட்ட மனைவி.. திருமணமான 2 மாதத்தில் நடந்த சோகம்
- எமனாய் வந்த நாய்... சாலையில் உருண்ட காவலர்... சாமியாய் காப்பாற்றியது 'இது'தாங்க..!