‘திடீரென குறுக்கிட்ட டூ வீலர்’... ‘தடுப்பு சுவர் மீது மோதி’... 'நடந்த கோர விபத்து'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி அருகே சாத்தான்குளத்தை சேர்ந்தவர் உஸ்மான். இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை விமான நிலையத்தில் இருந்து, ராமநாதபுரத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். பரமக்குடி அடுத்த சோமநாதபுரம் நான்குவழி சாலை சந்திப்பில் கார் சென்ற போது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக பிரேக் பிடிக்க முடியாமல் இருசக்கர வாகனம் மீது மோதிய கார், சாலை நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது இடித்து விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பரமக்குடியை சேர்ந்த சங்கர், காரில் பயணித்த உஸ்மான் மற்றும் அவரது மகள்கள் ஹைநூல் அரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!
- 'இப்படியா வருவீங்க?'.. 'பணியில் இருந்த டிராஃபிக் காவலருக்கு'.. நள்ளிரவில் நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!
- 'ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...குலை நடுங்க வைக்கும் வீடியோ!
- ‘கோயிலுக்கு போனபோது’... 'ஆழமான கிணற்றில் விழுந்து’... ‘குழந்தைகள் உள்பட பலருக்கு நேர்ந்த கோரம்’!
- ‘பைக்கை முந்தும் போது எதிரே வந்த கார்’.. ‘நேருக்கு நேர் மோதிய இரு பைக்குகள்’ 2 பேர் பலியான பரிதாபம்..!
- ‘நிலைத்தடுமாறி விழுந்ததில்’... ‘ஹெல்மெட் அணியாமல் சென்ற’... 'இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்'!
- 'அப்பா உன்ன குளிக்க வைக்குறேன்'...'திடீரென வந்த போன் கால்'... குலை நடுங்க வைக்கும் சம்பவம்!
- 'சரி.. என்னதான் கார் மேல'.. பிரியம் இருந்தாலும்.. 'அதுக்குன்னு இப்படியா?'.. பெண் செய்த காரியம்!
- 'அசுர வேகத்தில் வந்த எஸ்யுவி'... 'டிவைடரை தாண்டி பல்டி'... உதறல் எடுக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
- ‘அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி’... 'சாமி தரிசனத்துக்கு வந்தபோது’... ‘கார் மீது ஏறி, நடந்த கோர சம்பவம்’!