‘அதிவேகத்தில் வந்த லாரி டிரைவரால்’... ‘சொந்த ஊருக்கு திருப்பியபோது’... ‘நடந்த கோர விபத்து’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழக்கடையத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி மில்டன் ஜெயக்குமார். இவரது மகள் 26 வயதான ரெனிலா ரோஸ். இவர் திருமணமானவர். இந்நிலையில் இருவரும் மதுரையில் வேலை சம்பந்தமாக சென்றுவிட்டு, நள்ளிரவில் சொந்த ஊருக்கு தங்களது காரில் வந்துக் கொண்டிருந்தனர். பிள்ளையார் நத்தம் விளக்கு பகுதி அருகே  கார் சென்றுகொண்டிருந்தது.

அப்போது கேரளாவில் இருந்து மதுரைக்கு, சாலையின் எதிரே அதிவேகத்துடன் தாறுமாறாக வந்த லாரி வந்த வேகத்திலே காரின் மீது மோதியுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்து லாரிக்குள் சென்றது. காரில் பயணித்த மில்டன் ஜெயக்குமார் மற்றும் ரெனிலா ரோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தாலும், லாரி ஓட்டுநரான கேரளாவைச் சேர்ந்த சிராஜூதின் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்த தந்தை, மகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்தனர். அதில், தூக்க கலக்கத்தில்  லாரியை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

ACCIDENT, SRIVILLIPUTHUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்