'பேக்கரிக்குள் நுழைந்த காரால் பரபரப்பு'... அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று, பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் வழியாக அதிவேகத்தில் சென்றது. அப்போது எதிரே பள்ளி வாகனம் வருவதை கண்ட கார் ஓட்டுநர், காரை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் காரை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர், பள்ளி வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வலது பக்கம் திருப்பியுள்ளார். அப்போது சாலையை கடந்து சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது.
அதோடு நில்லாமல் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது மோதி பேக்கரிக்குள் புகுந்தது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். கார் கட்டுப்பாட்டை இழந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதனிடையே அந்த கார் ஓட்டுநரின் பெயர் சூர்யபிரகாஷ் என்பதும், குங்குமம்பாளையம் பிரிவில் உள்ள கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்துள்ளது. அவரை பொதுமக்கள் சிறைபிடித்து வைத்த நிலையில், யாரும் அறியா வண்ணம் தப்பிச் சென்றுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓடும் காரில்'... 'கோவை பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்' ... 'பதை பதைக்க' வைக்கும் வீடியோ!
- 'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'!
- ‘விபத்தில் தப்பித்தவர்களுக்கு அடுத்த நொடி காத்திருந்த பயங்கரம்..’ 3 பேர் உயிரிழந்த சோகம்..
- தாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'கோயிலுக்கு போனபோது நேர்ந்த விபரீதம்'... 'பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு'!
- இயந்திர கோளாறால் அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
- 'புயல்' வேகத்தில் வந்த கார்.. போலீஸிடம் இருந்து காப்பாற்றிய 'புறா'.. வைரல் சம்பவம்!
- 'மகளின் திருமண பேச்சுக்காக சென்றவரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்து பலி’.. விபத்தான அரசுப்பேருந்தால் சோகம்!
- 'இரு லாரிகளுக்கிடையே சிக்கிய மினி லாரி' ... 'அடுத்தடுத்து லாரிகள் மோதி நேர்ந்த சோகம்'!
- 'வெயில் கொடுமை தாங்கல!' 'அதுக்காக காருக்கு இதெல்லாமா பூசுவாங்க'... வைரலாகும் புகைப்படம்!