‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிவேகத்தில் வந்த கார், நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில், அடுத்தடுத்து வந்த 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில், இன்று அதிகாலை திண்டிவனத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக வந்ததில் நிலைதடுமாறி அந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் அந்த காரை பின் தொடர்ந்து வந்த மூன்று கார்களும் மோதிக் கொண்டன. அதனை தொடர்ந்து வந்த, இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லாரியும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கார், லாரி மற்றும் பேருந்து ஆகியவற்றில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தையடுத்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எதிரே வந்த அரசுப் பேருந்து’... ‘நேருக்கு நேர் மோதிய கண்டெய்னர் லாரி’... ‘தீப்பிடித்து எரிந்து கோர விபத்து’!
- ‘நான் என்ன கேட்டேன்’... ‘நீங்க இப்டியா பண்ணுவீங்க?’... ‘ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்’!
- 'பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்'...'ஆற்றில் கவிழ்ந்த பேருந்து'... கதறி துடித்த பயணிகள்!
- 'பேருந்துக்கு நெருக்கமாக சென்ற பெண்...'சென்னையில் நடந்த கோர விபத்து'... 'நெஞ்சை பிழியும் வீடியோ'!
- 'அத்திவரதரை தரிசிக்க'... 'ஆசையாக சென்ற குடும்பம்'... 'நடுவழியில் நிகழ்ந்த கோர சம்பவம்'!
- லாரியும், காரும் நேருக்குநேர் மோதி கோரவிபத்து..! தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் 4 பேர் பலியான சோகம்..!
- அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..
- ‘மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து’.. ‘டிரைவர் எடுத்து துரித முடிவு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘சாலையைக் கடக்கும் போது நடந்த விபரீதம்’.. பைக் மீது மோதிய தனியார் பேருந்து.. 2 பேர் பலியான பரிதாபம்..!
- ‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’