'எங்க வழி, தனி வழி'...'இந்தியர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு'...பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என ஊழியர்கள் அச்சத்தில் உள்ள நிலையில், பிரபல நிறுவனம் இந்தியாவில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களுக்கு சம்பள மற்றும் ஊதிய உயர்வை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனம்,  தகவல் தொழில்நுட்ப துறை சேவைகள், கிளவுட் சர்வீசஸ், டிஜிட்டல் சேவைகள் மற்றும் பல தொழில் முறை சேவைகளை வழங்கி வருகிறது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், 2,70,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் நலன் கருதி, ஏப்ரல் மாதத்தில், ஒற்றை இலக்கில் உயர்வை வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் யார்டி, ''நாங்கள் எந்த ஊழியர்களுக்கும் சம்பள குறைப்பு செய்யவில்லை. மேலும் ஏ மற்றும் பி தர ஊழியர்களுக்கும் (சுமார் 84,000 பேர்) உயர்வு வழங்கியுள்ளோம். இந்த பதவி உயர்வானது  ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ள அவர், மார்ச் மாத ஊதியத்துடன் ஊழியர்களுக்கான சம்பளம் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்  இந்திய ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவசர கால மருத்துவ உதவிகளுக்காக 25 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளதாக'' அஸ்வின் யார்டி கூறியுள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நேரத்தில், சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு செய்யாமல் இருந்தாலே போதும் என பல நிறுவங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணும் நேரத்தில், ஊழியர்களின் சிரமத்தை புரிந்து கொண்டு செயல்பட்டுள்ள கேப்ஜெமினி நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்