கொரோனா ஊரடங்கு காலத்தில் பதியப்பட்ட ‘10 லட்சம்’ வழக்குகள் வாபஸ்.. முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படும். கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும்.

இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்’ என முதல்வர் கூறினார்.

மேலும், ‘குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களின் போது பதியப்பட்ட சுமார் 1500 வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட  குற்றங்களுக்காக பதியப்பட்ட வழக்குகள், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது குறித்த வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் பொதுநலன்கருதி கைவிடப்படுகிறது’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்