ரூபாய் 'நோட்டுகள்' வழியாக கொரோனா பரவுமா?... என்ன 'செய்ய' வேண்டும்?... விளக்கம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரூபாய் நோட்டுகள் வழியாக கொரோனா பரவுமா? என்பதற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் சென்னை, திருவள்ளூர்  மாவட்டங்களில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கிடையில் ரூபாய் நோட்டுகள் வழியாக கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இதற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி, ''சில்லறை மட்டும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா நுண்கிருமி பரவும் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை. எனினும் முன்கூட்டியே கவனமாக இருப்பது நல்லது. ஒருவரின் சுவாச துகழ்கள் படிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் சில்லறை மட்டும் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்