'ஹெலிகாப்டர் மூலம் திடீரென தூவப்பட்ட மலர்'... 'தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்பகோணத்தில் தொழிலதிபா் ஒருவா் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஹெலிகாப்டரில் இருந்து மலா்களை தூவவைத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியைச் சோ்ந்தவர்கள் கணேஷ், அகிலா தம்பதியினர். கணேஷ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளைக் கொண்டு பால்பண்ணை நடத்தி வருகிறாா். மேலும் இவா் சொந்தமாக ஹெலிகாப்டா் ஒன்றையும் வைத்துள்ளாா். இந்நிலையில், தனது மகனின் முதலாவது பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட கணேஷ், அகிலா தம்பதி முடிவு செய்தனர்.

அதன்படி உறவினா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஸ்ரீநகா் காலனி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் கணேஷ் தனக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இருந்து மலா்களை தூவச் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டாா். ஹெலிகாப்டா் ஒன்று வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாழ்வாக பறப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் இது தொடா்பாக தகவல் தொிவித்தனா்.

ஆனால், ஹெலிகாப்டா் பறப்பதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஹெலிகாப்டா் புறப்படும் இடம், தரையிரங்கும் இடம், ஹெலிகாப்டா் பறக்க வேண்டிய உயரம் உள்ளட்டவை முறையாக வகுக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எனினும், ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்துள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FATHERSON, LOVE, KUMBAKONAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்