"54 பயணிகளையும் பத்திரமா கொண்டுபோய் சேர்த்துடனும்".. நெஞ்சுவலியோடு பேருந்தை ஓட்டிச்சென்ற ஊழியர்.. கடைசில நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தான்குளம் அருகே பேருந்து பயணத்தின் போது நெஞ்சு வலி ஏற்பட்ட போதிலும் பயணிகளை பத்திரமாக பேருந்து நிலையத்தில் கொண்டு போய் சேர்த்த ஓட்டுநர் மரணம் அடைந்தது  அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

மீசை முருகன்

நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து சாத்தான்குளம் நோக்கி நேற்று காலை 11 மணிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இதை முருகேச பாண்டியன் என்பவர் ஓட்டிச் சென்றார். இவரை அப்பகுதி மக்கள் மீசை முருகன் என செல்லமாக அழைக்கின்றனர். 54 பயணிகளுடன் சென்ற பேருந்து சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முருகேச பாண்டியனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார் அவர். அப்போது ஓட்டுனரிடம் தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகவும் பயணிகளை பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று கூறியபடி மீண்டும் பேருந்தை மெதுவாக இயக்க தொடங்கியிருக்கிறார் முருகேசபாண்டியன்.

சிகிச்சை

கொஞ்ச நேரத்தில் சாத்தான்குளம் சென்றடைந்த பேருந்திலிருந்து தள்ளாடியபடி இறங்கிய முருகேச பாண்டியனை கண்டு நேரக் காப்பாளர் மற்றும் நடத்துனர் பதறிப் போயினர். உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முருகேசபாண்டியன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு காரணமாக முருகேச பாண்டியன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க, நடத்துனரும் நேரக் காப்பாளரும் அதிர்ச்சியடைந்தனர்.

சோகம்

மக்களுடன் அன்பாகவும் கனிவாகவும் பேசக்கூடியவர் முருகேசன் என்கிறார்கள் சக ஊழியர்கள். பயணிகளை பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று பாடுபட்டவர் இப்போது எங்களை விட்டு சென்று விட்டார் என அந்த பேருந்து நடத்துனர் கண்ணீருடன் தெரிவித்தார்.

முருகேச பாண்டியனின் மரணம் அறிந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தன்னை நம்பி வந்த பயணிகளை பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும் என நெஞ்சு வலியையும் பொருட்படுத்தாமல் பேருந்தை ஓட்டிச் சென்ற முருகேசபாண்டியன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

SATHANKULAM, BUSDRIVER, HEARTATTACK, சாத்தான்குளம், பேருந்து, ஓட்டுநர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்