'அண்ணன்' உடையான் போலீசுக்கு 'அஞ்சான்'... 'செல்போன்' டவர் மீது ஏறி நின்று... 'தம்பிக்காக' குரல் கொடுத்த அண்ணன்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருத்தணி அருகே தம்பி மீது பொய்வழக்கு போட முயற்சிப்பதாக கூறி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த கேசவராஜ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது தம்பி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட முயற்சிப்பதாக கூறி அவரது அண்ணன் பிரகாஷ் என்பவர் காவல்நிலையம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனை அறித்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ராசுவை விடுவிப்பதாக கூறி பிரகாஷிடம் பேச்சுவார்தை நடத்தினர். நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு அவர் மீட்கப்பட்டார்.

THIRUVALLUR, CELL PHONE TOWER, BROTHER, SUCIDE, THREATENS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்