‘அக்கா, தம்பிக்கு 10 ஆண்டு சிறை’.. நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு.. வெளியான பரபரப்பு பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிக வட்டி தருவதாக கவர்ச்சியான விளம்பரம் செய்து மக்களிடம் பண மோசடி செய்த அக்கா, தம்பிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் நசியானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது சகோதரர் நந்தக்குமார். கடந்த 2012ம் ஆண்டு இருவரும் சேர்ந்து கணினி மையம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து அதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 13 ஆயிரம் ரூபாய் வட்டியும், 3 ஆண்டுகள் முடிவில் அசலையும் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் அதில் முதலீடு செய்துள்ளனர். விளம்பரம் செய்ததுபோல் முதல் மாதம் வட்டியை கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சுமார் 82 லட்சம் ரூபாயுடன் அக்காவும், தம்பியும் திடீரென தலைமறைவாகியுள்ளனர். அண்மையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை நீதிமன்றம் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்