‘காய்ச்சலுக்கு போட்ட ஊசி’.. ‘வீட்டுக்கு போனதும் வந்த பயங்கர வலி’.. கோவை இளைஞருக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளைஞர் ஒருவருக்கு காய்ச்சலுக்காக போடப்பட்ட ஊசியின் நுனிப்பகுதி உடைந்த உள்ளே சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (26). இவர் கடந்த மாதம் 22ம் தேதி காய்ச்சலுக்காக குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தம்பிதுரைக்கு டைப்பாய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக செவிலியர் ஒருவர் தம்பிதுரைக்கு ஊசி போட்டுள்ளார். அப்போது ஊசியின் நுனிப்பகுதி தம்பிதுரையின் இடுப்பு பகுதியில் உடைந்து சிக்கியுள்ளது.

இதுகுறித்து செவிலியரிடம் தம்பிதுரை கேட்டுள்ளார். அதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளனர். வீட்டுக்கு சென்றபின் இடுப்பு பகுதியில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வேறு ஏதாவது மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அவர் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது ஊசி போடப்பட்ட இடுப்பு பகுதியில் 7 மில்லி மீட்டர் அளவுக்கு ஊசியின் நுனிப்பகுதி உடைந்து எலும்பு பகுதியில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் கேட்டபோது மருத்துவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தம்பிதுரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

HOSPITAL, COIMBATORE, SYRINGE, TYPHOID, YOUTH, FEVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்