“என் மகள் டிரஸ்ஸ கிழிச்சு, முடிய பிடிச்சு அடிச்சாங்க” - பிரிக்யா தந்தை உருக்கம் Exclusive
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்ஸ்டாகிராமில் ஆடல் பாடல் செய்து பதிவேற்றி பிரபலமானது பிரிக்யாவின் குடும்பம். இந்த பெண்ணின் தாயார், அண்ணன் அவ்வப்போது தந்தை உள்ளிட்ட பலரும் இவர்களது வீடியோவில் வலம் வருவார்கள்.
முன்னதாக பிரிக்யாவின் தாயார், “என் மகளுக்கும் மகனுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரி செல்லம் கொடுத்து வளர்த்தேன். எங்கள் குடும்பத்தினரிடம் பலரும் சரிவர பேசுவதில்லை. உறவினர்கள் பிணைப்பில் இல்லை. என்னுடைய கோடீஸ்வர தம்பி கூட பேசுவதில்லை. இந்த நிலையில் எங்களுடைய மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஒரு வருட காலமாக மகளுக்கும் மருமகனுக்கென்றும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தோம். மகளும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.
அவருக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தது. இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்று வந்தனர் . இருவரும் சேர்ந்து கூட ரீல்ஸ் வீடியோக்களைச் செய்தனர். ஆனால் இதனிடையே யாரோ என் மகளை ஏன் உடனடியாக திருமணம் செய்கிறீர்கள்? நீங்கள் இன்னும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் என்பது போல் சொல்லி குழப்பி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது, இதனால் அவள் திருமணம் வேண்டாம் என சொல்லிவிட்டு, அவளும் என் கணவரும் எங்களை பிரிந்து சென்றுவிட்டனர்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேக பேட்டி அளித்த பிரிக்யாவின் தந்தை பேசும்போது, “பிள்ளை தனியாக வீட்டை விட்டு செல்லும் முடிவு எடுக்கும்போது அப்படி விட கூடாது என நானும் மகளுடன் வீட்டை விட்டு சென்றேன். என் மனைவியோ நான் சொன்ன நியாயங்களை கேட்காமல், மகன் பேச்சையே கேட்டார். என் மகளை அடித்து பணியவைத்து தான் அப்படி ஒருவனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் வீட்டில் பேசினார்கள். இதை நான் மறுத்தபோது ப்ரகன் என்னை அடிக்கிறான். என் பிள்ளையின் சட்டையை கிழித்து, முடியை பிடித்து அடித்து, அவள் நகையை பிடுங்கிக் கொண்டு , போனை பிடுங்கிக் கொண்டனர். அவன் எங்களை கொல்லுவதாக சொல்கிறான்.
இதனால் அவள் (பிரிகாவின் தாயார்) பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சென்ற நாட்களும் குறைவு. அதன் பின்னர் பாப்பாவை அழைத்துக்கொண்டு புல்லட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட தான் போனோம். சாப்பிட்டுவிட்டு வருவதற்குள், என் மகனும், என் மகளுக்கு பார்த்த பையனும் தேடிவந்துவிட்டனர். பின்னர் என் பிள்ளையை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றுவிட்டேன். நிச்சயதார்த்தம் பண்ணியபோதே இப்படி என்றால், கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முடியாது என என் மனைவியிடம் சொன்னேன். ஆனால், மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, அவளுடைய சர்டிபிகேட் அனைத்தையும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் பிள்ளையின் போன், இன்ஸ்டாகிராம், யூடியூப் பாஸ்வேர்டை தங்கள் பெயரில் மாற்றிக்கொண்டனர். எங்களுக்கு பிரிக்யாவின் அம்மா, அண்ணன், அவளுக்கு பார்த்த பையன் கொலை மிரட்டல் விடுத்ததுடன், நாங்கள் பண மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளித்தனர். நான் இதையெல்லாம் சமாளித்து அவளை காலேஜ்க்கு அனுப்பினேன். ஆனால் காலேஜில் போன பிள்ளையை தேடிவந்து பிடித்துவிட்டனர்.” என கூறியுள்ளார்.
அப்போது இதுபற்றி பேசிய பிரிக்யா, “என் கல்லூரி நண்பர்களுக்கு தெரியும், என் உடலில் இருந்த காயங்களை பார்த்துள்ளனர். ஆனால் அப்போது என் அண்ணன் கல்லூரிக்கு வந்து கெட்ட வார்த்தையில் திட்டினான். ஆனால் என் நண்பர்கள் என்னை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு உதவினர். ஆனால் நான் போய்விட்டேன், பாப்பா வந்துடுவா.. விட்டுவிடலாம் என அவர்கள் நினைக்கவில்லை. பின்னர் நானும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றபோது என்னை விசாரித்தனர். நான் எனக்கு வாங்கிக் கொடுத்த வண்டி, நகை உள்ளிட்ட விபரத்தை சொன்னேன். ஆனால் அது எதுவுமே நானாக கேட்கவில்லை.
நான் என் அம்மாவிடம் சொன்ன ஆசைகளை, என் அம்மா அந்த பையனிடம் (நிச்சயம் செய்யப்பட்டவர்) சொல்ல, அவன் என்னை சர்ப்ரைஸ் பண்ணுவதாக அனைத்தையும் வாங்கி தந்தார். எந்த பொருட்களையும் நான் எடுத்துவரவில்லை. என் போனில் இருந்தும் 1 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டார்கள். அனைத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன். போலீஸாரும் இதையெல்லாம் அந்த பையனிடம் சொல்ல, அந்த பையனுடன் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என எழுதி வாங்கினர். ஆனாலும் அவன் எழுதி தரவில்லை. காரணம் எப்படியேனும் அவன் என்னை அடைய நினைத்ததுதான்” என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்