அண்ணனுக்காக கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. களேபரம் ஆன மண்டபம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாப்பிள்ளை பிடிக்கவில்லை என அண்ணன் கூறியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘செம சர்ஃப்ரைஸ்’.. CSK இளம் வீரருக்கு கல்யாணம்.. வெளியான க்யூட் வீடியோ..!
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் நடைபெற இருந்தது. இதனால் இரு வீ்ட்டு உறவினர்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதை அடுத்து மணமகளை அலங்கரித்து மணமேடைக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.
மாற்றுத்திறனாளியான மணமகன், சென்னை ஐஐடியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் இரண்டாவது திருமணத்துக்காக சிதம்பரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மணமகன் குறித்து அறிந்த மணமகளின் அண்ணன், மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், இதை மீறி திருமணம் செய்து கொண்டால் தாய் உயிரை மாய்த்துக் கொள்வதாக தங்கையிடம் கூறியுள்ளார். இதனால் மணப்பெண், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று கூறி மணமேடையில் இருந்து கீழே இறங்கினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மணப்பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தனது அண்ணனுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘கிரேட் எஸ்கேப் ஆன ரிஷப் பந்த்’.. இல்லன்னா கேப்டனா முதல் மேட்சே மோசமான ரெக்கார்ட்டா மாறியிருக்கும்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் செல்லத்தோட தான்".. இப்படியும் ஒரு ஆசையா?.. ஷாக்-ஆன இணைய உலகம்..!
- புதைக்கப்பட்ட அண்ணன் உடல்.. 18 நாட்கள் கழித்து தம்பி செய்த விஷயம்.. அதிர வைத்த சம்பவம்
- மாப்பிள்ளைக்கு 10 கண்டிஷன் போட்ட மணப்பெண்.. ‘அந்த 8-வது பாயிண்ட் வேறவெவல்’.. வைரலாகும் கல்யாண கட் அவுட்..!
- 10 நாள்ல கல்யாணம்.. மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரத்தால் அதிர்ந்துபோன குடும்பம்..காதலனின் பெற்றோருக்கு மகளான கல்யாணப்பெண்..
- தகாத உறவை கண்டித்த தம்பி.. ஆத்திரத்தில் ஆள் வைத்து ‘அக்கா’ செஞ்ச காரியம்.. பரபரக்க வைத்த சம்பவம்..!
- கன்னியாகுமரி அருகே கல்யாணத்துக்கு முன் ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. உடனே மணமகன் வீட்டார் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- சைலண்டா நடந்து முடிஞ்ச பிரபல CSK வீரரின் திருமணம்.. வரவேற்பில் பங்கேற்கும் தோனி மற்றும் கோலி.. வைரலாகும் புகைப்படங்கள்..!
- "பாவம்யா.. கல்யாணம் முடிஞ்சா... 3 நாளைக்கு இத பண்ணக் கூடாதா??.." வியப்பில் ஆழ்த்தும் வினோத பழக்கம்.. Trending
- கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ‘ஷாக்’ ஆன மணமகன் வீட்டார்..!
- "ஐபிஎல் ஆடுறதுக்காக கல்யாணத்தையே மாத்தி வெச்சுட்டாரு.." இளம் வீரர் எடுத்த முடிவு.. வெளியான சுவாரஸ்ய தகவல்