கல்யாணத்துல போட்ட 'ஓ சொல்றியா மாமா' பாடல்.. சமந்தாவுக்கே Tough கொடுத்த கல்யாணப் பெண்ணோட அப்பா.. வேற லெவல் சார் நீங்க..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணப் பெண்ணின் அப்பா நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புஷ்பா
பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவந்து வெற்றிபெற்ற இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். ஆந்திரா பகுதியில் விளையும் அரிய வகை மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஓ சொல்றியா மாமா
தெலுங்கில் பிரபல பின்னணி பாடகி இந்திராவதி சவுகானின் மயக்கும் குரலில் வெளிவந்த "ஊ அண்டவா" பாடலின் தமிழாக்கமான 'ஓ சொல்றியா மாமா' பாடலை முன்னணி நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா பாடி இருந்தார். இந்தப் பாடல் ரிலீசான கொஞ்ச நாட்களிலேயே வைரல் ஆனது. ரீல்ஸ் துவங்கி அனைத்து சமூக வலை தளங்களிலும் 'ஓ சொல்றியா மாமா' ஒலித்த வண்ணம் இருந்தது. படத்தில் அல்லு அர்ஜுனும் சமந்தாவும் ஆடிய நடனத்தை போலவே ரசிகர்கள் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வந்தனர். ஆண்ட்ரியா குரலும், சமந்தாவின் நடனமும் இந்த பாடலை வேறு உயரத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
அப்படி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலுக்கு மணமகளின் தந்தை ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
திருமணம்
தற்போது வைரலாகிவரும் இந்த வீடியோவில் மணமகளின் தந்தை தனது தோழர்கள் மற்றும் உறவினருடன் 'ஊ அண்டவா' பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அதுவும் அச்சு அசலாக சமந்தாவின் நடன அசைவுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது. இதனால் உற்சாகம் அடைந்த மக்கள் கரகோஷம் எழுப்ப, அந்த நபர் தனது நடனத்தை தொடர்கிறார்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் 4 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. "இன்று நான் பார்த்த மிகச்சிறந்த வீடியோ இது" எனவும் " இது கியூட்-ஆக இருக்கிறது" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
Also Read | விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆற்றின் கரை அருகே 'Wedding' போட்டோஷூட்??.. எதிர்பாராத நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்
- கண்ணீருடன் ஏலத்துக்கு வந்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு உடைந்துபோன அதிகாரிகள்..!
- கல்யாண மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்.. ஓப்பன் பண்ணிய உடன் வெடித்துச் சிரித்த மணப்பெண்.. வைரலாகும் வீடியோ..!
- ராஷ்மிகா-கே டஃப் கொடுப்பாரு போலயே.. போதையில் 'ஓ சாமி' பாடலுக்கு டான்ஸ்..வைரலாகும் வீடியோ..!
- 'அரபிக்குத்து' ஃபீவர் நம்ம இந்தியன் பிளேயர்ஸையும் விட்டு வைக்கல.." கோதாவில் இறங்கி மரண மாஸ் காட்டிய இளம் வீரர்கள்
- ‘பார்த்தாலே கண் கலங்குதே’.. அழுது அழுதே மன நோயாளியான அம்மா.. பெத்தவங்கள இப்படி விட எப்படி மனசு வருதோ.. மனதை ரணமாக்கிய சோகம்..!
- "இந்தா மச்சான் சீர்".. வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள்.. நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை..!
- செங்கல்சூளையில் லாரி டிரைவருடன் பழக்கம்.. கண்டுகொள்ளாத தாய்.. கண்டித்த தந்தை.. ஆத்திரத்தில் தாயுடன் சேர்ந்து மகள் போட்ட பகீர் திட்டம்..!
- ‘வீட்டில் மகள்.. காப்புக்காட்டில் அப்பா..’ அடுத்தடுத்து மர்ம மரணம்.. என்ன நடந்தது? அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- ஏடிஎம் வாசல்ல மயங்கி விழுந்த அப்பா.. என்ன நடக்குதுன்னு தெரியாம அழுத 2 வயது மகன்.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்..!