10 நாள்ல கல்யாணம்.. மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரத்தால் அதிர்ந்துபோன குடும்பம்..காதலனின் பெற்றோருக்கு மகளான கல்யாணப்பெண்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகப்பட்டினம் அருகே, திருமணத்திற்கு முன்னர் காதலன் இறந்துபோனதால், அவரது குடும்பத்துக்கு மகளாக வாழ்ந்துவருகிறார் இளம்பெண் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | வெற்றி உயரத்துல இல்ல.. மன உறுதில இருக்கு.. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஆர்த்தி IAS.. யாருப்பா இவங்க?

துயரம்

நாகப்பட்டினம் அருகே பிரபாராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பத்மாவதி தம்பதியின் மகன் சபரி கிருஷ்ணன். 26 வயதான சபரி, மின்வாரியத்தில் பணியாற்றிவந்துள்ளார். இவரும் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி சபரி கிருஷ்ணன் - ரேவதிக்கு திருணம் நடைபெற இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஜூலை மாதம் பணியில் இருந்தபோது சபரி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.

சோகம்

திருமணத்திற்கு சில வாரங்களே இருந்த நிலையில் மணமகன் சபரி கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. தங்களது மகனை இழந்த பெரும் சோகத்தில் இருந்த கோவிந்தராஜ் - பத்மாவதி தம்பதி செய்வதறியாது திகைத்து நிற்க, மணப்பெண் ரேவதி அவர்களது மகளைப்போல அங்கேயே தங்கி பணிவிடைகளை செய்யத் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பத்மாவதி,"சபரி இறந்த அன்று ரேவதி எங்களது வீட்டிற்கு வந்தார். அனைத்து சடங்குகளும் முடிவடையும் வரையில் இங்கேயே இருந்த ரேவதியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், சில நாட்களிலேயே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரேவதியை மீண்டும் எங்களது வீட்டிற்கே அழைத்துவந்து விட்டுச் சென்றனர் அவரது பெற்றோர். அவரின் மூலமாக என்னுடைய மகனை பார்க்கிறேன்" என கவலையுடன் குறிப்பிட்டார்.

உதவி கிடைக்கவில்லை

இந்நிலையில், சபரி கிருஷ்ணன் இறந்தபோது, 3 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக தருவதாகவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மின்சார வாரியம் அறிவித்திருந்ததாக கூறும் சபரி கிருஷ்ணனின் சகோதரர் வெங்கடேஸ்வரன் இதுவரையில் எவ்வித உதவியும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

10 ஆண்டுகளாக காதலித்துவந்த காதலன் திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டதால், அவரது குடும்பத்தில் ஒருவராகவே இளம்பெண் வாழ்ந்துவருவது பலரையும் சோகம் கலந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | வரலாறு காணாத வறட்சி.. தண்ணீருக்கு வெளியே வந்த 3,400 ஆண்டுகள் பழமையான நகரம்.. அதிர்ந்துபோன ஆராய்ச்சியாளர்கள்..!

NAGAPPATTINAM, BRIDE, கல்யாணம், கல்யாணப்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்